பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 267 கண்டனன் கற்பினுக்கு அணியை அனுமன் இலங்கையிலிருந்து வெற்றிகரமாகத் தன் கடமையை முடித்துவிட்டுத் திரும்பினான். அங்கதனும் மற்றவர்களும் மகிழ்ச்சியால் ஆடிப்பாடினர். அனைவரும் கிட்கிந்தைக்கு வேகமாகத் திரும்பிய போது வழியில் இருந்த சுக்கிரீவனுடைய மது வனத்தில் புகுந்து அட்டகாசம் செய்து மது வருந்தி மகிழ்ந்தனர். அந்தச் செய்தியைக் கேட்டு சுக்கிரீவன் நல்ல செய்தியை அவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று குறிப்பினால் உணர்ந்தான். அதை 'திண் திறல் அவன் செயல் தெரிய நோக்கினான் வண்டு அறல் ஒதியும் வலியன்; மற்று இவன் கண்டதும் உண்டு; அவள் கற்பும் நன்று! எனக் கொண்டனன், குறிப்பினால் உணரும் கொள்கையான்' என்று கம்பன் குறிப்பிடுகிறார். அனுமன் திரும்பி விட்டான். மகிழ்ச்சி பொங்க, தான் சீதையைக் கண்ட செய்தியை இராமபிரானிடம் கூறுகிறான். “கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால் தென் திரை அலை கடல் இலங்கைத் தென்னகர்; அண்ட நாயக! இனித் துறத்தி ! ஐயமும் பண்டுள துயரும்! என்று அனுமன் பன்னுவான்” இன்னும் 'வில்பெரும் தடந்தோள் வீர! வீங்குநீர் இலங்கை வெற்பில் நற்பெரும் தவத்தளாய நங்கையைக் கண்டேன் அல்லேன் இற்பிறப்பு என்பது ஒன்றும் இரும்பொறை என்பது ஒன்றும் கற்பு எனும் பெயரது ஒன்றும் களி நடம் புளியக் கண்டேன்' என்றும் இன்னும்,