பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 2)=> காதலும் பெருங்காதலும் xxvi பின்னர் கல்பாலம் கட்டத் தீர்மானிக்கப்பட்டு சேது அணை கட்டப்படுகிறது. சேது அணை மிகவும் புனிதமானது. அதன் பெருமையைப் பற்றி இராமனே கூறுகிறான். 'கங்கையே, யமுனை, கோதாவரி, நருமதை, காவேரி பொங்கு நீர் நதிகள் யாவும், படிந்து அலால் புன்மை போகா, சங்கு எறி தரங்க வேலைதட்ட, இச்சேது என்னும் இங்கிதின் எதிர்ந்தோர் புன்மையாவும் நீக்கும் அன்றே: என்பது கம்ப நாடன் கவிதையாகும். சேதுவின் பெருமை அறிந்து இன்றும் பாரத நாடு முழுவதிலிருந்தும் எண்ணற்ற மக்கள் சேது விற்கு யாத்திரை வருவதையும் அந்தப் புனித தீர்த்தத்தில் நீராடு வதும் அந்த அணைக்கு வணக்கம் செலுத்துவதையும் காண்கிறோம். இனிக் கம்பநாடன் இராவணனுடைய பெருமைகளையும் அவனுடைய தனியாண்மையையும் கம்பீரத்தையும், பல இடத்தும் சிறப்பித்துக் கூறுவதைக் காணலாம். சூர்ப்பனகை தன்னை இன்னார் என்று இராமனிடம் அறிமுகப்படுத்திக் கொண்ட போது “பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி; முப்புரங்கள் செற்ற சேவலோன் துணைவன் ஆன செங்கையோன் தங்கை; திக்கின் மாவெல்லாம் தொலைத்து, வெள்ளி மலையெடுத்து உலகம் மூன்றும் காவலோன் பின்னை; காம வல்லியாம் கன்னி; என்றாள்" அத்தகைய இராவணனுக்குப்பின் பிறந்தவள் என்று கூறுகிறாள். இன்னும், காற்றினையும், புனலினையும், கனலினையும், கடுங்காலக் கூற்றினையும், விண்ணினையும், கோளினையும் பணி கோடற்கு ஆற்றினை நீ, ஈண்டிருவர் மானுடவர்க்கு ஆற்றாது மாற்றினையோ உன் வலத்தைச் சிவன் தடக்கை வாள் கொண்டாய்” என்று சூர்ப்பனகை இராவணனைப் பற்றிக் கூறுகிறாள். துறவி வேடத்தில் சீதை முன் நின்ற இராவணன் தன் பெருமை கூறுகிறான்,