பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 274 >}=== காதலும் பெருங்காதலும் கேள்வியுற்ற இந்திரசித்தன் நிகும்பலை யாகம் செய்து யான் புதிய பலம் பெற்று இந்த மனிதர்களை ஒழிப்பேன் என்று சூழுரைத்து அதற்காக இராவணனுடைய அனுமதியையும் பெற்றான். ஒரு மாயச் சீதையை உருவாக்கி அதை வெட்டிக் கொன்றும் அயோத்திக்குப் படையெடுத்துச் செல்வதாகவும் போக்குக் காட்டி அவர்களைத் திசை திருப்பி விட்டு அந்த நேரத்தில் நிகும்பலை யாகத்தை முடித்துவிட இந்திரசித்தன் திட்டமிட்டான். அனுமன், மருத்துவ மலையை அதனிடத்தில் வைத்து விட்டுத் திரும்பிய போது மாயா சீதையை இந்திரசித்தன் கொல்வதைக் கண்டான். மனம் வருந்தினான். 'பெரும் சிறைக் கற்பினாளைப் பெண்ணினைக் கண்ணிற் கொல்ல, இரும் சிறகு அற்ற புள் போல், யாதும் ஒன்று இயற்றல் ஆற்றேன் இரும் சிறை அழுந்து கின்றேன், எம்பிரான் தேவிபட்ட அரும் சிறை மீட்ட வண்ணம் அழகிது! பெரிதும் அம்மா!' என்று அனுமன் பெரும் வருத்தமும் கவலையும் கொண்டு அச்செய்தியை இராமன் முதலியோரிடம் வந்து கூறினான். அனுமன் கூறிய செய்தியைக் கேட்டு இராமன் மூர்ச்சை யானான். வீடணன் அந்த நிகழ்ச்சியில் சூது இருப்பதாக ஐயம் கொண்டான். இராமன் தெளிவடைந்த போது இலக்குவன் பேசினான். “தையலைத் துணையிலாளைத் தவத்தியைத் தருமக்கற்பின் தெய்வதம் தன்னை மற்றுன் தேவியைத் திருவைத், தீண்டி வெய்யவன் கொன்றான் என்றால் வேதனை உழப்பது இன்னும் உய்யவோ! கருணையாலோ, தருமத்தோடு உறவும் உண்டோ?” என்று கூறினான்.