பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.07 - அ.சீனிவாசன் 277 பேர்மகளைத் தழுவுவான் உயிர் கொடுத்துப் பழி கொண்ட பித்தா! பின்னைப் பார்மகளைத் தழுவினையோ திசையானை மறுப்பு இறுத்த பணைத்த மார்பால்’’ என்று புலம்பி அழுதான். இராவணனுடைய மூத்த மனைவி, பட்டமகிஷி மாவீரன் இந்திரசித்தனை ஈன்றெடுத்த தாய் மண்டோதரி தனது கணவனுடைய உடல் மீது விழுந்து புலம்பி அழுதாள். காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேரழகும், அவர்தம் கற்பும் ஏந்து புயத்து இராவணனார் காதலும் அச் சூர்ப்பணகை இழந்த மூக்கும், வேந்தர் பிரான் தயரதனார் பணிதன்னால் வெங்கானில் விரதம் பூண்டு போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார் பெருந்தவமாய் போயிற்று அம்மா!' என்றெல்லாம் புலம்பி அழுதாள். மண்டோதரி இவ்வாறு பலவும் கூறி அழுது புலம்பிக் கணவன் உடல் மீது விழந்து உயிர் நீங்கினாள். வீடணன் இறந்ததோர் அனைவருக்கும் இறுதிக் கடன் ஆற்றினான். சீதையின் மீட்சி இராமனுடைய ஆணையின் படி வீடணனுக்கு இலக்குவன் முடி சூட்டினான். விடணன் இலங்கையின் அரசப் பொறுப்பை ஏற்றான். வெற்றிச் செய்திகளைச் சீதையிடம் கூறி வருமாறு இராமன் அனுமனை அனுப்பினான். அனுமன் சீதையிடம் சென்றுச் செய்திகளைக் கூறினான். சீதை பெரு மகிழ்சியடைந்தாள். இராமன், சீதையைச் சீரோடும் சிறப்போடும் அழைத்து வரும்படி வீடணனிடம் கூறினான். அவனும் சீதையிடம் சென்று இராமனுடைய கருத்தைத் தெரிவித்தான். அப்போது சீதை,