பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 18 < =حچّ" காதலும் பெருங்காதலும் அகலிகையோ தவறை உணர்ந்து வருந்தி முனிவரிடம் பிழை பொறுத்துச் சாபவிமோசனம் வேண்ட, இராமன் இந்தப் பக்கம் வரும் போது அவனுடைய கால் துகள்பட்டு இக் கல்வடிவம் தீரும் என்று விமோசனம் அளித்தார். அதன்படி அகலிகை இராமனுடைய கால் துகள் பட்டுக் கல் வடிவம் நீங்கி பழைய மெய் வடிவம் எய்தினாள். இராமன் அவளைத் தாயென வணங்கி அவளைத் தன் கணவனான கெளதம முனிவன் பால் சேர்த்தான் என்பது அகலிகை பற்றிய செய்தியாகும். இந்தப் பகுதியில் கம்பன் சில முக்கியமான நுட்பமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். அவை பெரிதும் பெண்கள் பாற்பட்டது, ஒழுக்க நெறி பற்றியதுமாகும். காவியத்தில் அகலிகை பற்றிய செய்திகள் வரும் போது மனையின் மாட்சியை அழித்து இழிவெய்தியவள் இம்மாதவன் மனைவி' என்றும் தீவினை நயந்து செய்த தேவர் கோன் தனக்குச் செங்கண் ஆயிரம் அளித்தோன் பன்னி அகலிகை இவள் ஆகும்” என்றும் அகலிகையை இராமன், 'அன்னையே அணையாட்கு இங்ங்ண் அடுத்தவாறு' என்றும் விசுவாமித்திரனிடம் வினவியதாகவும் கம்பர் குறிப்பிடுகிறார். இங்கு அகலிகை செய்த தவறு பற்றி மனையின் மாட்சியை அழித்தவள்’ என்றும், இந்திரன் செய்த தவறு பற்றி தீவினை நயந்து செய்த தேவர் கோன்’ என்றும் கம்பர் குறிப்பிடுகிறார். தீவினைகளை அறியாமல் செய்வதும் அறிந்தே செய்வதுமாக இருவகைப்படும். இதில் இங்கு தேவர்கோன் தீவினையை அதாவது தீய செயலை அறிந்தே புரிந்தே நயந்தே அதாவது விரும்பியே செய்துள்ளான். சிறந்த வல்லமை மிக்க வஜ்ஜிராயுதத்தைப் படைக்கலனாகக் கொண்டுள்ள தேவர்கோன், முனிவன் இல்லாத போது அவனுடைய மனைவியைச் சேரவேண்டும் என்று விரும்பி அதற்கான நேரம் பார்த்து வகுத்துக் கொண்டு திருட்டுத்தனமாக வஞ்சகமாக மாறுவேடத்தில் அகலிகையின் கணவன் வேடத்தில் அவளிடம் சென்று அவளைத் தழுவினான். இதை "தையலாள் நயனவேலும், மன்மதன் சரமும் பாய உய்யலாம் உறுதி நாடி உழல்பவன், ஒரு நாள் உற்ற மையலால் அறிவு நீங்கி, மாமுனிக்கு அற்றம் செய்து பொய்யிலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான்' இந்திரன் தனக்கு ஏற்பட்டக் காம உணர்வைத் தாங்க முடியாமல் அம்மய்யலால் அறிவு நீங்கி இச் செய்கையைச் செய்து சாபம் பெற்றான். அது அவன் செய்த தவறுக்கு ஒரு தண்டனையாகும்.