பக்கம்:கரிகால் வளவன்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

கொண்டிருந்தது. ஆண் குழந்தையாகப் பிறக்க வேண்டும்; தாயும் சுகமாக இருக்க வேண்டுமே! வேண்டாத தெய்வங்களை யெல்லாம் வேண்டினார்.

“வீல்” என்ற உயிரை ஊடுருவும் தாயின் வேதனைத் தொனி; அதனை அடுத்து, “குவா” என்ற குழந்தையின் குரல் கேட்டது. அடுத்தபடி உள்ளிருந்து பணிப்பெண் ஓடிவந்தாள்; “ஆண் குழந்தை!” என்று கத்திக்கொண்டே வந்தாள். இங்கே இரும்பிடர்த்தலையார் மூர்ச்சை போட்டுக் கிடந்தார். குழந்தையின் அழுகை ஒலி அவருடைய உணர்ச்சியைத் தூண்டி அப்படிச் செய்து விட்டது. உள்ளே தாயும் மூர்ச்சையுற்றாள். அங்கே ஒருத்தி தாயைத் தெளிவித்தாள். இங்கே ஒருத்தி தமையனாரைத் தெளிவித்தாள்.

தெளிந்து எழுந்தவர் காதில், “ஆண் குழந்தை” என்ற வார்த்தைகள் விழுந்தன. அவர் கைகள் அவரை அறியாமலே தலைமேல் ஏறின.

அவர் ஆசையின்படியே ஆண் குழந்தை, இளஞ்சேட்சென்னியின் குலத்தைக் காக்க வந்த கான்முளை, பிறந்து விட்டது. தாயும் பிழைத்தாள்.

இப்படிப் பிறந்தவன்தான் திருமா வளவன்; கரிகாலன் என்று சரித்திரம் புகழும் சோழ சக்கரவர்த்தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/18&oldid=1232459" இலிருந்து மீள்விக்கப்பட்டது