பக்கம்:கரிகால் வளவன்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

வில்லை. பல காலமாக மண்ணாசையை வளர்த்து வந்த சிற்றரசர்கள் ஒன்பது பேருமே எதிர்த்தனர். ஒரு முறை வெற்றி கண்ட சோழ அரசன் விடுவானா? சோழப் படையின் ஊக்கத்தில் சிறிதும் குறைவே இல்லை. அவர்கள் எத்தகைய போருக்கும் ஆயத்தமாக இருந்தனர்.

வெண்ணியில் நிகழ்ந்த போரிலே வெற்றி பெற்றவர்களுக்கு இந்தப் போர் எம்மாத்திரம்? மிக எளிதில் வாகைப் போர்க்களத்தில் கரிகாலன் வாகை அணிந்தான். ஒன்பது குறு நில மன்னர்களிற் சிலர் மாய்ந்தனர்; சிலர் ஓடி ஒளித்தனர்.

கரிகாலன் இரண்டாவது முறையும் வெற்றி பெற்றுக் காவிரிப்பூம்பட்டினத்தை வந்து அடைந்தான். மீட்டும் மீட்டும் பகை மன்னர் எதிர்பாராமல் எதிர்த்தால் அடுத்தடுத்துப் போர் செய்ய நேருமே என்ற யோசனை அவனுக்குத் தோன்றியது. சோழ நாட்டின் வளப்பத்தைப் பெருக்குவதற்கு எத்தனையோ காரியங்கள் செய்ய வேண்டியிருந்தன. முடியை அணிந்தவுடனே வில் ஏந்தும் நிலை வந்தது, கரிகாலனுக்கு.

வேண்டுமென்று அவன் போர் செய்யவில்லை. பகை மன்னர்களே அவனைப் போரில் ஈடுபடச் செய்தார்கள். அவனுடைய வீரமும், சோழ நாட்டுப் படைத்திறமும் வெளிப்படுவதற்குப் பகைவர்களே காரணமாக இருந்தனர். இனியும் குறும்பு செய்து கொண்டே இருந்தால் அமைதியாக அரசாட்சி செய்ய முடியாது. ஆதலால் கையோடு கையாகப் பகைவர்களை அடியோடு வேரறுக்கும் வேலையை முதலில் முடித்து விடவேண்டு மென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/51&oldid=1205662" இலிருந்து மீள்விக்கப்பட்டது