பக்கம்:கரிகால் வளவன்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

களிக்கூத்தாடினர். சோழ நாடு முழுவதும் ஆனந்தக் கடலில் அமிழ்ந்தது. தமிழ் நாட்டில் உள்ள அனைவருமே தமிழ் நாட்டு அரசன் வடக்கே சென்று திக்கு விசயம் செய்து வந்தான் என்பதை எண்ணிப் பெருமிதம் கொண்டனர்.

முன்பு வாக்களித்தபடி வச்சிர நாட்டு மன்னன் குவை குவையாக முத்துக்களையும் கலைஞர்களையும் அனுப்பிக் காவிரிப்பூம் பட்டினத்து அரண்மனையில் பெரிய முத்துப் பந்தர் ஒன்றை அமைக்கச் செய்தான். அந்தப் பந்தர் வச்சிர நாட்டுக் கலை முறையில் அமைந்து விளங்கியது. வச்சிர நாட்டு மன்னனைக் கரிகாலன் அடிப்படுத்திய தன் சின்னமாக அது நிலவியது. அவ்வாறே மகத மன்னன் தன் நாட்டுச் சிற்பியர்களை அனுப்பிக் காவிரிப்பூம் பட்டினத்தில் ஒரு பெரிய பட்டி மண்டபத்தை அமைக்கச் செய்தான். புலவர்கள் கூடி ஆராய்ச்சி செய்யும் மண்டபத்திற்குப் பட்டி மண்டபம் என்று பெயர். மதுரைமா நகரிற் சங்க மண்டபம் இருந்தது போலக் காவிரிப்பூம்பட்டினத்திலும் ஓர் ஆராய்ச்சி மண்டபம் எழும்பியது. மகத வேந்தன் தன் நாட்டுப் பொருள்களால் அந்த மண்டபத்தை அணி செய்தான். புலவர் கூடும் இடமாய், மகத நாட்டுச் சிற்பத்திற்கு உறைவிடமாய், கரிகாலன் மகத மன்னனைப் பணிவித்ததைக் குறிக்கும் அடையாளமாய்ப் பட்டி மண்டபம் இலங்கியது. கரிகாலனிடம் நட்புப் பூண்ட அவந்தியரசன் இன்னும் பெரியதொன்றை நாட்டினான்; பூம்புகாராகிய காவிரிப்பூம் பட்டினத்தின் முகப்பில் மிக உயர்ந்த தோரண-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/56&oldid=1205681" இலிருந்து மீள்விக்கப்பட்டது