பக்கம்:கரிகால் வளவன்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

களில் எல்லாம் மக்கள் அவனை அன்புடன் வரவேற்றனர். அவனுடைய பெருமைகளைக் கதை கதையாக மக்கள் நாடு முழுவதும் சொல்லிக் கொண்டிருந்தனர். அந்தக் கதைகளின் தனி நாயகனை நேரே பார்க்கும்போது அவர்களுக்கு உண்டான ஆனந்தத்துக்கு அளவேது? கரை ஏது? அந்தப் பகுதிகளில் உள்ள ஊர்க்காரர்களெல்லாம் ஆளிட்டுக் கரையை உறுதிப்படுத்தியிருந்தார்கள். ஆயிரக்கணக்கான பொன் கூலி கொடுத்துத் தொழிலாளர்களை வைத்து இந்தக் காரியத்தைச் செய்தாலும், இவ்வளவு சிறப்பாக நிறைவேறியிராது. அந்த அந்த ஊர்க்காரர்கள் தங்கள் வயல்களில் பெருகப்போகும் வளத்தை நினைந்து, இந்த வேலை தம்முடைய சொந்த வேலை என்றே எண்ணி ஊக்கம் கொண்டார்கள். ஆகையால் கரை அருமையாக அமைந்தது.

கரிகாலன் கரையையும் காவிரியையும் சோழ நாட்டையும் நாட்டு மக்களையும் கண்டு கண்டு உவகை அடைந்தான். இறைவன் திருவருளை வியந்தான். ஒவ்வோர் ஊராகத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தான். திருச்சிராப்பள்ளிக்கு வந்தான். அங்கே திருவரங்க நாதனையும் திருவானைக்காவுடைய பிரானையும் தாயுமானவரையும் வழிபட்டு இன்புற்றான். மீண்டும் பட்டத்து யானையின்மேல் ஏறி மேற்குத் திசை நோக்கிப் புறப்பட்டான்.

சிறிது தூரம் வந்திருப்பான். அப்போது பெரிய சேவல் ஒன்று அயலில் ஓரிடத்திலிருந்து ஓடி வந்தது. கரிகாலன் ஏறிச் செல்லும் பட்டத்து யானை சற்றே நின்றது. அந்தக் கோழி படபட-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/61&oldid=1205084" இலிருந்து மீள்விக்கப்பட்டது