பக்கம்:கரிகால் வளவன்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

முதியவர்கள் அவையத்தில் உள்ளவர்களைப் பார்த்தார்கள். சுற்றிலும் பழுத்த சான்றோர்கள் அமர்ந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தார்கள். ஆனால் அவர்களிடையே மிக்க இளமையை உடைய ஒருவன் அமர்ந்திருந்தான்.

அவன் வேறு யாரும் அல்லன்; கரிகாலன்தான். அறங்கூறவையத்தில் அறக் கடவுளே தலைவர். ஆதலின் தனக்கென்று தனிச் சிறப்பு ஒன்றும் இல்லாமல் அங்குள்ள சான்றோர்களோடு தானும் ஒருவனாக அவன் அமர்ந்திருந்தான். முடியை எப்போதும் கவித்துக்கொள்வது வழக்கம் அன்று. ஆதலின் அவனைக் கண்டதும் முறையிட வந்தவர்களுக்குச் சிறிது ஐயம் உண்டாயிற்று. அவன் கரிகாலன் என்று அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. “யாரோ இளைஞன் ஒருவன் இங்கே உள்ள சான்றோர்களோடு அமர்ந்திருக்கிறானே! இவன் இங்கே வரும் வழக்கில் இருசாராரும் கூறும் செய்திகளைக் கேட்டு முடிவு காணுவதற்கு ஏற்ற அநுபவம். உடையவன் அல்லவே!” என்று தம்முள் பேசிக்கொண்டார்கள்.

அவர்கள் அவ்வாறு பேசிக்கொண்டதை அருகில் இருந்த ஒற்றன் ஒருவன் கேட்டான். அன்று அறங்கூறவையத்தில் வந்த வழக்கு ஒருவாறு முடிவடைந்தது. மறு நாள் முன்னே சொன்னவர்களின் வழக்கை முறையிட்ட ஏற்பாடு செய்தார்கள். கரிகாலன் தன் அரண்மனைக்குச் சென்றான். வழக்கைத் தீர்த்துக்கொள்ள வந்தவர்கள் தன்னைக் கண்டு இளைஞன் என்று பேசிக் கொண்ட செய்தி ஒற்றன் மூலமாக அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/68&oldid=1232494" இலிருந்து மீள்விக்கப்பட்டது