பக்கம்:கரிகால் வளவன்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9. பாட்டும் பரிசும்

முடத்தாமக் கண்ணியார் பாடல், புலவர் அவைக்களத்தில் ஏறிப் பாராட்டைப் பெற்ற பிறகு வேறு புலவர்கள் கரிகாலனுடைய புகழைப் பல வகையிலே பாடி அரங்கேற்றிச் சோழ மன்னன் வழங்கும் பரிசிலைப் பெற்றுச் சென்றார்கள். கடியலூரில் உருத்திரன் என்பவருடைய புதல்வராகிய கண்ணனார் என்பவர் சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கினார். அவரைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்று யாவரும் சொல்வார்கள். அவர் கரிகாலனைப்பற்றி ஒரு பெரிய பாட்டைப் பாடினர். காவிரிப்பூம்பட்டினம் வர வரச் சிறப்பு அடைந்திருப்பதைக் கண்டவர் அவர். அப் பட்டினம் வாணிகத்தினால் உலகில் உள்ள பல நாடுகளுடன் தொடர்பு கொண்டு விளங்கியது. தமிழ்நாட்டின் பண்டங்களையும் கரிகாலன் புகழையும் உலகெங்கும் பரப்புவதற்கு அந்தக் கடற்கரைப் பட்டினம் வாயிலாக இருந்தது. பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினத்தையே குறிக்கும்படியாக அதற்குச் சிறப்பு அமைந்தது.

அந்த நகரத்தின் பெருமையையும் செல்வ மிகுதியையும் வாணிகத்தையும் வாயாரப் பாட வேண்டுமென்று உருத்திரங்கண்ணனார் எண்ணினார். அதோடு கரிகால் வளவனுடைய வரலாற்றையும் அந்தப் பாட்டில் இணைக்க விரும்பினார். பல நாள் சிந்தித்து, “பட்டினப் பாலை” என்ற நீண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/84&oldid=1232507" இலிருந்து மீள்விக்கப்பட்டது