பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 107

அவளுக்கு அழுகையே வந்துவிடும் போலிருக்கிறது. “ஆறு ரூவாய ஏங்கொறச்சிட்டா!...”

கண்ட்ராக்கிட்ட அகராதியாய்ப் பேசியிருப்பே. அதனாத்தா, வாயத்துறக்கக் கூடாது...” என்று பரிதாபக் குரலில் கூறிவிட்டு அழிக்ாம்பா விரைந்து செல்கிறாள்.

பொன்னாச்சிக்கு உலகம் கண்முன் இருண்டு வரு கிறது. - -

அது அவனுவ வழக்கம் புள்ள. இதுன்னாலும் குடுத்தானில்ல, போ...’ என்று சந்தன_நாடான் கிழவன் கண்களைச் சரித்துக் கொண்டு பெட்டி சீர்செய்த கூலியை எண்ணிக் கொண்டு செல்கிறான்.

ஒவ்வொருவராக எல்லோரும் பெரிய வாயிலைத் தாண்டிச் செல்கின்றனர்.

அவள் . சுற்று முற்றும் பார்க்கிறாள். முகம் தெரியாத இருள் சூழ்கிறது, அம்ப்ாரமான உப்புக் குவைகள்-விறிச் இட்டு விட்ட ர்ெத்திக் காடுகள். மயான அமைதி நிவுைம் அச்சம் நெஞ்சைப் பற்றிக் கொள்கிறது.

ராமச்ாமி. அவன்... அவன் எங்கே போய்விட்டான்? நீ பயப்படாதே, எப்போதும் காவலாக இருப்பேன் என்று சொன்னானே? கருமை, உலகைத் தன் துகினால் இழுத்து மூட விரைந்து வந்துவிட்டது. அப்பனிடம் சொல்லித்தான் கேட்கச் சொல்ல வேண்டும் நாளை ...

அப்பச்சியை வரச்சொல்ல வேண்டும். அவள் சாலையில் விரைந்து செல்கிறாள். யார் யாரோ உருவங்கள் செல்வதை அவள் பார்க்கிறாள். நடுச்சாலை யில் விளக்கொளியைப் பாய்ச்சிக் கொண்டு பஸ் ஒன்று செல்கிறது.

முன்னே யார் யாரோ ஆளத்துக்காரர் செல்கின்றனர். பயமில்லை. ஒட்டமும் நடையுமாக அவள் விரைகை யில் முன்னே செல்லும் உருவங்களில் யாரோனும் ராமசாமி