பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 113

கொண்டு, சேலையைப் பிழிந்து கொண்டு வருகிறாள். தல்ை சொட்டச் சொட்ட, முடியை விரித்துப் போட்டுக் கொண்டு அவள் வருவதைக் கண்ட சின்னம்மா,

“ஏட்டி, கூலிக்கு நேராச்சின்னா நாளக்கிப் போயிக் காலயில வாங்கிவாரம், செவந்தனியப் போச்சொல்லுற. நீ இருட்டி இந்நேரங்களிச்சி தேரிகடந்து வார. ஒங்கமாம மாமியெல்லர், பெரியதனக்காரா. நீ லச்சயில்லாம நடக்கே. ஒரு சூடு விழுந்தா சின்னாச்சி மண்டய உருட்டுவா.”

சேலையைப் பிழிந்து கட்டிவிட்டு விரிந்த கூந்தலுடன் அவள் ஆணி அடித்த நிலையில் நிற்கிறாள். சின்னம்மாவின் சொற்கள் ஒவ்வொன்றும் ஒரு பாம்பாசி உருப்பெற்று அவள் மீது ஊர்வதாகப் படுகிறது.

‘அம்மா, பசிக்கி.சோறு போடம்மா...சோறு...” பிள்ளைகள் தட்டை வைத்துக் கொண்டு ஒசை செய்கின்ற னர். சின்னம்மா பொங்கும் குழம்பைக் கரண்டியால் கிளறி விட்டு அடுப்பைத் தணிக்கிறாள்.

வந்திட்டாளா அவ?” என்று அப்பனின் குரல் கேட் கிறது.

“...கூலி போடுற அன்னிக்கு நேரமாவும். நீ பொழு தோட ஆடுவர வேண்டியதுதான? எம்பிட்டுக் கூலி குடுத்தா...’

“இருவத்து நாலுக்கு இருவத்து மூணு இருக்கு. ஒரு ரூவாக்கு வாங்கித் தின்னட்டும், புள்ளயளுக்கு ஒரு காரூவாப் பட்டாணிக் கடல வாங்கிச்சி வராண்டா?...’

பொன்னாச்சிக்கு வடிக்கக் கண்ணிரில்லை. “ஏட்டி, மொவத்துல கைய வச்சிட்டிருக்கே...அல்லா ரையும் கூட்டிச் சோறு வையி...”

அவள் பேசவில்லை. சோறென்றதும் எல்லோரும் வந்து உட்கார வேண்டும். ஒரு நாட்பொழுதின் மகத்தான நேரம் அது. பொழுது விடிவதும் பொழுது போவதும் இந்த “மகத்தான நேரத்துக்குத்தான். சோறு: அரிசிச் சோறு.