பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II.4. கரிப்பு மணிகள்

மீன் கண்டமிட்ட குழம்பு. நல்லகன்னு முக்கை உறிஞ்சி நெட்டை விட்டுக் கொண்டு உண்ணுகிறான். தம்பி...தம்பி எங்கே?

சின்னம்மா காலுக்கு மஞ்சள் தூளையும் விளக்கெண் ணெயும் குழைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறான். “அந்தப் பய மத்தியானங் கூட இப்பிடித்தா படுத்திருந்தா. எளுப்பி காப்பித்தண்ணி வச்சிக் குடுக்கச் சொன்னே பாஞ்சாலிய..’ என்று அப்பன் கூறுகிறார்.

அவள் துணுக்குற்ற நெஞ்சுடன் வாயில் திண்ணைக்கு வந்து அவனை எழுப்புகிறாள். கருண்டு கிடக்கிறான்.

‘தம்பி...தம்பி.லே பச்ச, சோறு தின்ன வால...’ மூச்ச வேகமாக வருவது போலிருக்கிறது. “சோறு...வானா’

சோறு வாணா...” என்று முணகிவிட்டுத் திரும்பிப்

“விறிஞ்சோறில்லே. மீன் கொளம்பு வச்சிருக்கு. ஒருவாத் தின்னிட்டுப் படுத்துக்க...” -

சோறு வேண்டாம் என்று அவன் எந்த நேரத்திலும் கூற மாட்டானே?

அவள் அவன் உடம்பில் கை வைத்துப் பார்க்கிறாள். சூடு காய்கிறது. மீன் குழம்பு வைத்து அரிசிச் சோறு பொங்கிய நாளில் உடம்பு காய்வது எத்தனை துரதிஷ்டம்?

‘ஒடம்பு சுடுது, சின்னம்மா அவனுக்கு!’

‘சூடு...உப்புச் சூடுதே. கண் பொங்கியிருக்கு, நாயித்துக் கெளமயில எண்ணெ வச்சிக் குளிலேன்னே, அப்பச்சியோட சந்தக்கிப் போறன்னு ஆடிட்டிருந்தா. சொன்ன பேச்சிக் கேக்கணும்..” என்று சின்னம்மா குற்றம் சாட்டுகிறாள்.

அவனை மெள்ள எழுப்பி பொன்னாச்சி தட்டின் முன் கொண்டு வந்து உட்கார்த்துகிறாள். இரண்டு வாய், கொறித்து விட்டு மீண்டும் திண்ணைப்பாயில் முடங்கிக் கொள்கிறான்.