பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II 6 கரிப்பு மணிகள்

சந்தைக் கும்பலில் அவள் புகுந்து நடக்கிறாள்.

அவன் அவளுடைய புள்ளிச் சேலையைக் குறியாக்கிக் கொண்டு அதே சைக்கிளுடன் தொடர்ந்து செல்கிறான். :பக்கத்தில் இடிப்பது போல நெருங்கி, ஏத்தா கோவமா?” என்று யாருக்கும் கேட்காத மெல்லிய குரலில் வினவு கிறான். - -

கொட்டைப் புளி சவளம் சவளமாகத் தட்டில் மலர்த் திருக்கிறது.

“எப்படிக் குடுக்கிறிய’

‘மூணு ரூ.வா.” ‘அம்புட்டுப் புளியுமா? என்னாயா, வெல சொல்லிக் குடு?’ என்று அங்கிருந்து ராமசாமி ‘ஆசியம் பேசுகிறான்.

அவளுக்கு ஒர்புறம் இனிக்கிறது; ஒர்புறம்.ஒர்புறம். ஐயோ! இவர் ஏன் நேற்று வரவில்லை?

பொன்னாச்சி புளியைக் கையிலெடுத்துப் பார்க்கிறாள். பிறகு புளி நன்றாக இல்லை என்று தீர்மானித்தாற் போன்று விடுவிடென்று மிளகாய்க் கடைக்குச் செல்கிறாள். கடைக் காரனான முதியவன், ‘ஏத்தே! வெல கேட்டுட்டுப் போறியே, ரெண்டே முக்கால் எடுத்துக்க புளி ஒருக் கொட்ட சொத்து ஒண்னு கிடையாது!” i

அவள் செவிகளில் அது விழுந்ததாகத் தெரியவில்லை. மிளகாய்க் கடையையும் தாண்டிப் போகிறாள்; சரசி, “அக்கா வளவி, வளவி வாங்கனும் அக்காl’ என்று கூவுகிறாள்.

  • வளவிக் கடை கோடியில இருக்கு. அங்க வா போவ லாம்!” என்று பாஞ்சாலி ஒடுகிறாள். சரசியும் ஒடுகிறது.

‘ஏவுட்டி, ஏணிப்படி ஒடுறிய? வளவி கடாசில தா

என்று தடுத்து நிறுத்தப் பார்க்கிறாள். நல்ல கண்ணு வோ, சினி மிட்டாய்க்காக மெல்லிய குரலில் இராகம்