பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கரிப்பு மணிகள்

‘ஏலே. வால...” என்று குமரனையும் அழைத்துக் கொண்டு ஆச்சி சாப்பாட்டுக்குத் தயாராகிறாள்.

சிறு பனஓலைச் சார்பில் அவர்கள் அமருகின்றனர். மூடி வைத்திருக்கும் களியையும் துவையலையும் வாழை, யிலைச் சருகில் எடுத்து வைக்கிறாள்.

  • முனிசிப்பு வீட்டில் ஆச்சி நெல்லு வேவிக்கணுமின் னாவ, நாளக்கி வாரமின்ன...”

அவர் களியை எடுத்து முகர்த்து பார்க்கிறார். தண்ணி நல்லாக் காஞ்சுப் போட்டுக் கிண்டலியா? வேத்தும் போச்சு. சளிச்ச வாடை வருது.

“வீட்ட ஒரு தண்ணிகாச்ச நாதியில்ல. பொன் னாச்சிய நா அனுப்பிச்சே குடுத்திருக்க மாட்டே. புருசன் இப்ப சாவக்கெடக்கான்னு பொய் சொல்லி, அளத்துக்கு விட்டுச் சம்பாதிக்கக் கூட்டி போயிருக்கா...’

அவருக்குக் கோபம் வருகிறது. # ‘பேச்சை ஏன் மாத்துறே? களி வாயில வைக்க வழங்கல? நீ ஒரு சோறு ஒழுங்காக ஆக்குறதில்ல. பேச்சு... பேச்சுதா!’

நோ கேட்டதுக்குப் பதிலே சொல்ல மாட்டிய துரத் துடிக்குப் போய் வந்திய. எம்புட்டுச் செலவாச்சி...எதா னாலும் இப்ப அந்தத் துட்டை எங்கிட்டக் குடுத்திடணும். வள்ளிப் பொண்ணுக்கு ஸ்கூலுக்குப் போட்டுப் போக வெள்ள சட்ட இல்லேங்கா...”

அவர் பேசவில்லை. பொன்னாச்சி வீட்டை விட்டுச் சென்ற பிறகு சோறும்கூட அவருக்கு வகையாகக் கிடைக்க வில்லை. அவளும் தம்பியும் அவருக்குப் பாரமாகவா இருந் தார்கள். பச்சை நாள் முழுதும் துலாவில் நீரிறைத்துப் பாய்ச்சுவான். பொரிகடலை வாங்கிக்கொள்ள என்று பத்து பைசா துட்டுக் கொடுத்தால் வாயெல்லாம் பல்லாக நிற்பான். இரண்டு பேரும் அன்று யாருக்கோ உப்புச் சுமந்து கொட்டி விட்டு வருவதை அவர் பார்த்து விட்டு வந்திருக்கிறார். அவளை இங்ரு மறுபடியும் வேலை செய்யக் கூட்டி வரக்கூடாது. ஆனால், அவளுக்குக்