பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் I 43

தலைவருக்கு இந்தச் செய்தி தெரிய வேண்டியதுதான் தாமதம்; உடனே ஆயிரம் பதினாயிரம் உப்பளத் தொழி லாளரை அவர் ஒன்று சேர்த்து விடுவார். மிகப் பெரிய தோர் பிரளயத்துக்குக் கருவானதோர் எழுச்சியை அந்த முதலாளிகளும் கணக்கப்பிள்ளைகளும் எதிர் நோக்கிசி சமாளிக்க வேண்டும் என்றதோர் உறுதி, கொடிக் கம்பமாய் அவனுள் எழும்பியிருந்தது. அந்தக் கொடிக் கம்பத்தில் தலைவர் போராட்டக் கொடியை ஏற்றி விடுவார் என்று அவன் வந்திருக்கிறான். ஆனால்...ஆனால்... -

என்ன ஆயிற்று? ஒரு நிமிடம் ஒரு யுகமாகப் போகிறது. அவர்கள் பேசி விட்டு, பேசிக் கொண்டு வெளியே வருகின்றனர். தனபாண்டியனும் வருகிறார். அவர்கள் சென்ற பிறகுதான் ராமசாமியின் மீது அவர் பார்வை விழுகிறது.

‘ஏம்ப்பா, ராமசாமி, வெளியே நிக்கே?...ஆளவே காணம் ரொம்ப நாளா! நோடீசு கொண்டு போட்டுட்டுப் போன கப்பையா வீட்டில பேசக் கூப்பிட்டா நா வரதுக்கில் லாம போச்சி...”

சொல்றதுக் கொண்ணுமில்ல, அண்ணாச்சி, சிட்டக் கிழிச்சிட்டாங்க!” ராமசாமிக்குக் குரல் படீரென்று உடைந் தாற் போல் வருகிறது.

கண்கள் நிலைக்க அவர் வியப்பை வெளியாக்கு கிறார். l

என்ன சிட்டைக் கிளிச்சிட்டாகளா? ஒனக்கா?” ஆமாம். நாயம் கேட்டே. ஒண்ணில்ல அண்ணாச்சி: அந்தத் தடியன் நாச்சப்பன், கணக்கப்புள்ள, இவனுவ பண்ணுற அக்குரவம் ஒண்ணா, ரெண்டா? தாய்க் குலத்துக்கு துரோகம் செய்யிறானுவ. பாத்திட்டு எப்பிடி இருக்க முடியும்? நம்ம ஒடம்புல ரத்தம் ஒடல? அளத்தில் ரெண்டு மாசமுன்ன ஒரு பொண்ணு புள்ள பெத்திட்டா. அவ உப்புச் சேத்து மண்ணுல விழுந்து கெடக்கா. இவனுவ ஏகறானுவ. அவளுக்கு ஒரு ஒதவி, ஒத்தாசை செய்யனுன்