பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 - கரிப்பு மணிகள்

மின்னு தொழிலாளிக்குத் தொழிலாளியே ஈரமில்லாம பயந்து சர்வுறா. நான் அப்பவே ஒரு முடிவெடுக்கணுமின்னு வச்சிட்டே...”

அவனுக்கு எதை முன்பு சொல்ல வேண்டும் எதை விட வேண்டும் என்று நிதானம் புரியவில்லை. மோதியடித்துக் கொண்டு சொற்கள் வருகின்றன.

“நீ சொல்ல வந்த விசயத்தச் சொல்லு ராமசாமி, சீட்ட கிளிக்க இப்ப என்ன வந்தது? அதில்ல முக்கியம்? நீ மாசச் சம்பளக்காரனாச்சே?”

ஒண்ணில்ல அண்ணாச்சி, ரொம்ப நாளாவே அந்த நாச்சப்பனுக்கு எம்மேல காட்டம். அளத்துல ஒரு பொண்ண வளச்சிட்டுக் கேடு செய்யப் பாத்தா. அது கொஞ்சம் ஒசந்த பண்புள்ள பொண்ணு. இவெ அல்டாப்புக்கு மசியல. நாவேற கண்காணிச்சிட்டே இருந்தே. அவனுக்கு அது புடிக்கல. சங்கம், தொழிலாளர் ஒத்துமைன்னு பேசுறேன்னு துரை ஏஜண்டுக்கும் கோபம். வீட்டக்காலி பண்ணுன்னா; அது ஒரு மாசமாவுது, பெறகு, நேத்துக்காலம முதலாளி என்னைக் கூப்பிடுறான்னு கணக்கப்புள்ள வந்தா. நா மொதலாளி முகத்தயே பார்க்குறதில்ல...’

  • ராமசாமி, உனக்குச் சொல்ல வந்த விசயத்தைச் சொல்லத் தெரியல. ஒன்ன வேலய விட்டு ஏன் நிப்பாட் டினாங்கறதச் சுருக்கமாச் சொல்லு. நான் ஏழரை மணிக்கு ஆத்துனரில் ஒரு மீட்டிங்குக்குப் போவணும்’ என்று தலைவர் கடியாரத்தைப் பார்க்கிறார்,

“சுருக்கந்தா. முதலாளி கூப்பிட்டனுப்பினா. நாச் சப்பன்: இருந்தான். “சோலைப் பயல் வேற குடிச்சுப் போட்டு நின்னான். திட்டமிட்டு எல்லாம் செய்தாப்பல என்ன அவமானம் செய்யவே எனக்குக் கோவம் வந்திரிச்சி. பொண்டுவகிட்ட அவன் நடக்கிறதச் சொன்னே. ஒண்னும் உளுமாந்திரம் இல்லாம இவனுவ எனக்கு அம்பது ரூபா சம்பளத்த எதுக்கு ஒசத்தறாங்க."