பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 13

மிதித்து மண்ணைப் பண்படுத்த வேண்டும். காலால் அழுத்தினால் அடிபதியலாகாது. இவ்வாறு பண்படுத்தும் பாத்திகளே உப்பை விளைவிக்கும் பெண் பாத்திகள்: ஆண்டு தோறும் தவறாமல் இந்தப் பெண் பாத்திகளுக்குக் குறையாமல் சிரெடுக்கவேண்டும். இந்தப் பாத்திகளில் விளையும் உப்பு வெள்ளை வெனேரென்று, தும்பைப்பூ வண்ணத்தில் கற்கண்டைப்போல் தோன்றும். அவ்வளவும் துரத்துக்குடித் துறையிலிருந்து ஏற்றுமதியாகும் கல்கத்தா’ உப்பு.

இந்த அளத்தில் கடலிலிருந்து நேராக நீரைக் கொண்டு வருவதில்லை. கிணறுகள் தோண்டி, அதிலிருந்து நீரை இறைவை.இயந்திரத்தால் தெப்பம் என்று சொல்லப்பெறும் முதல் பாத்திகளில் பாய்ச்சுகிறார்கள். இப்பாத்திகளில் நீரின் அடர்த்தி கூடியதும், முதல் கசடுகளான சேறு, கீழே படிந்துவிடும். இவ்வாறு ஆண்டு முழுவதும் படிந்த சேறு தான் இறுகிக் காய்ந்து நட்சத்திரச் சில்கன் பதித்தாற். போன்று ஜிப்சம் எனப் பெறும் கூட்டுப் பொருளாகிறது. இதைப் பெயர்த்தெடுக்கத்தான் கங்காளி, கண்ணுசாமியைத் தள்ளிச் செல்கிறான். i

கலே செவந்தகனி, சாமியாருக்கும் சிப்சம் பேத்துக் குடு...இங்கிட்டு நின்னு திருப்பிப்போடுவாரு...’

செவந்தகனியா?” என்று திருப்பிக் கேட்கும் கண்ணு சாமி எங்கோ ஒர் மூலையில் நோக்குகிறான்.

“ஆமா, நாதா, மெக்கிட்டா, காண்டிராக்டா மாமா?” மெக்கிட்டுன்னுதா சொன்னா. எனக்கு என்ன எளவு தெரியிது?...” -

சிவந்தகனி மருதம்பாளுக்குத் தம்பி முறையாகக் கூடியவன். அவன் ஒரு பாளத்தை வெட்டி, கண்ணுசாமி யின் கைகளில் வைக்கிறான். கண்ணுக்கு எல்லாம் மொத்தையாக இருக்கிறது. போகும் தடம் தெளிவாகத் தெரியாமல் “எங்கே கொண்டு எப்படிப் போடுவான்? கண் களிலிருந்து இனி வடிவதற்கு நீருமில்லை. ‘பல் முனைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/15&oldid=657313" இலிருந்து மீள்விக்கப்பட்டது