பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 கரிப்பு மணிகள்

ராமசாமி எதுவும் பேசாமல் நிற்கிறான். எந்தத் திசையை நோக்கினாலும் இப்படி மனித சமுதாயமே ஆள் பவர், அழுந்தப் பெற்றோர் என்று இரண்டுபட்டுக் கிடக்குமோ?

“சுசய்ட்டிய ஏன் தாத்தா பிரிக்கணும்”

‘ஏன் பிரிக்கணும்? நாம சேர் கட்டி சங்கம் சேந்து சாமான் வாங்கிப் போட்டு பொட்டி முடஞ்சு வித்து லாவம் காணுவமின்னா, தனி முதலாளிய வியாபாரம் எப்படியாவும்? நாலாளுக்குக் காசு அதிகம் குடுத்துத் தன் வசம் இழுத்துக் கிட்டான். சங்கம் பிரிஞ்சு போச்சு தம்பி, நீ பெரியவங்க கிட்டல்லாம் பேசுறவ தொடர்பிருக்கின்னு சொல்லிக்கிறா. இந்தத் தொழில் எங்க வயித்துக்கு அரைக்கஞ்சி வார்க்கும் தொழில் பனஒலை, நாரு, மூங்கில் எல்லாம் நியாய விலைக்கு எங்களுக்குக் கிடைக்கிறாப்பல பண்ணினின்னா கையெடுத்துக் கும்பிடுவம், ஒட்டுக்கேக்க எப்பமோ கச்சி கச்சியா கொடி போட்டிட்டு வாராவ. ஒட்டப் போடுங்க. ஒங்கக்கு எல் லாஞ் சேஞ்சு தாரமின்னுதாவ. எதும் சரிவாரதில்லை. எங்க ஒழப்ப, அரை வெலய்க்கிப் போடுதோம் பசிக் கொடுமையில...’

இங்கெல்லாம் ராமசாமி தொழிற்சங்கக் காசு பிரிக்க வந்ததுண்டு. அந்த தொழிற்சங்கக் காக-கட்டிட வாடகை இரண்டெர்ரு பேப்பர் வாங்கும் செலவு இவற்றுக்குக் கட்டி வருவது கூட கஷ்டம். தொழிற்சங்கத்துச் செயலாளன் பேச்சிமுத்து இங்குதான் இருந்தான். அவன் இந்தத் தொழிலையே விட்டுச் சென்று எங்கோ வியாபாரம் செய் கிறானாம்... -

“என்ன தம்பி...பேசாம இருக்கியே? எங்க தொழில்ல பாஞ்சாலி கஷ்டப்படுது. அரைக்கஞ்சிக்கு (7. பிள்ளியள உப்பு அறைவைக்கு அனுப்புறம். மாசி பங்குனிக் காலத்துல எங்க பொம்பிளக பண்பாட்டு வேலைக்குப்போயி ரெண்டு மூணு கொண்டாருவா, இப்ப அதுவுமில்ல..."