பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 0. கரிப்பு மணிகள்

-னாலும் குடிக்கிறது. ஆத்தா கருணைதான? ராமசாமிக்கு எரிச்சல் இன்னும் கிளர்ந்து மண்டுகிறது.

அரைக்கஞ்சி அவள் கருணை; பட்டினி அவள் கருனை,

அறியாமை, மெளட்டீகம் அவள் கருணை. அடுத்தவனை தம்பி, அவன் அமுக்கிட்டு மேலேறு றதும் நாம ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிட்டுச் சாவுறதும்கூட அவ கருணைதா,

சேப்...! * .

அவன் சைக்கிளைத் தள்ளி ஏறி மிதித்துக் கொண்டு போகிறான்,

14.

ஆடி மாசத்திலே ஆண்டுக்கொருமுறையே வரும் அம்மன் விழா. கண்கள் கரிக்க உருக்கி எடுக்கும் வெம்மைச் ஒட்டில் சில்லென்று பன்னிர்த்துளிகள் போல் அவர்கல் அனுபவிக்கும் “கொடை நாட்கள். ‘பணஞ்சோலை” அளத்தில் இந்தக் கொடை நாளில் வேலை கிடையாது. கண்ட்ராக்ட்” தவிர்த்த அளக்கூலிகளுக்குப் பதினைந்து ரூபாய் போனஸ் எனப்படும் சம்பளம் உண்டு.

பொன்னர்ச்சிக்கு வேலைக்குச் சேருகையில் செங்கமலத் தாச்சி போனஸ் என்ற சொல்லை. உதிர்த்ததும் தான் ஆவலோடு அதை நினைத்து மகிழ்ந்ததும் நினைவிருக்கிறது. ஆனால் அவள் கண்டிராக்ட் கூலியாதலால் அந்தச் சலுகை .கிடையாது என்று கூறிவிட்டார்கள். -

மருதாம்பாளின் அளத்தில் விடுப்பும் கிடையாது; உபரிப் பணமும் கிடையாது. அவள் வழக்கம்போல் வேலைக்குப் போய்விட்டாள்.

அன்றவைக் கொட்டடிச் சிறுவர்களுக்கு ஐந்தைந்து ரூபாய் கொடுத்திருக்கின்றனர். பச்சைக்கு மிகவும் மகிழ்ச்சி.

அவர்கள் வீட்டிலிருந்து இரண்டு மைல் தொலைவி லுள்ள தொழிலாளர் தெருவிலுள்ள முத்தலாலம்மன்