பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 153

பாஞ்சாலி, சரசி எல்லோரும் பிற்பகலே விழாவுக்குப் போய்விட்டார்கள். சின்னம்மாவும் இல்லை. சொக்குவும் வேறெங்கோ கடை போட போய் விட்டாள். வளைவே அமைதி படிந்து மெளனத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. பொன்னாச்சி சேலைக் கிழிசல் ஒன்றைத் தைத்துக் கொண் டிருக்கிறாள்.

நைந்த குரல் ஒன்று ஆதாரமற்ற மெல்லிழையாய் அலைந்து கொண்டு. அவள் செவிகளில் விழுகிறது.

‘தும்பப்பூ வேட்டியுடுத்து...’ என்ற குரல் ஒப்பாரி. செங்கமலத்தாச்சியின் குரல்தான்.

பொன்னாச்சி திடுக்கிட்டாற் போல் கூர்ந்து செவிமடுக் கிறாள். அவள் மிடுக்காகப் பேசியே இதுவரை கேட்டிருக் கிறாள். யாரும், எதுவும் பொருட்டில்லை என்ற அலட்சியப் பாவத்தையே அவள் முகத்தில், பேச்சில், பொன்னாச்சி கண்டிருக்கிறாள். வந்த புதிதில் அவள் மிகவும் இள்கிய மனம் கொண்டவள் என்று பொன்னாச்சி மதித்திருந்தாலும், பல சந்தர்ப்பங்களில் அது மெய்யில்லை என்று தூக்கி யெறிந்து பேசுவதை அறிந்து கருத்தை மாற்றிக் கொண் டிருக்கிறாள். அவள் ஒரு கருவக்காரி-ஆண்வம் கொண் டவள்.-பவுர் உள்ளவள். மகன் செத்தது கூடத் தெய்வம் தந்த கூலி என்ற பொருள்பட, சொக்குவும் மற்றவர்களும் கருத்துரைத்து அவள் மறைவாகக் கேட்டிருக்கிறாள். ஆனால் முகத்துக்கு முன் எல்லோரும் அந்த ராணிக்குக் குழை.

வார்கள். -

அவள் நீட்டி நீட்டி ஒப்பாரி வைக்கிறாள்? அவளுக்குச்

சொந்த பந்தம் என்று யாரேனும் இறந்து போய்ச் செய்தி

வந்திருக்கிறதா என்ன? -

ஊசி நூலை வைத்துவிட்டு, கதவைச் சாத்திக் கொண்டு .

பொன்னாச்சி முற்றத்துக்கு வருகிறாள். சன்னல் வழியாக

அவள் நார்க்கட்டிலில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறாள்.

க-10