பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 கரிப்பு மணிகள்

செங்கமலத்தாச்சி சிவப்பு, அல்லது கறுப்புச் சேலை தான் முக்காலும் உடுத்தி அவள் பார்த்திருக்கிறாள். அன்று கறுப்புச் சேலை உடுத்தியிருக்கிறாள். பாம்படக்காது தொங்க, அள்ளி முடிந்த கூந்தலின் பிசிறுகள் தொங்க, ஆச்சி சோகஆகுடம் உடையப் புலம்புகிறாள்.

‘பறக்கும் பறவைகளே...பாதை போகும்

மானுடரே...! இறப்போர்க்கு உயிர் கொடுக்கும் எம்மவனைக்

கண்டதுண்டோ...? இ.ஒ.ஒ. பாவி பயல் பாம்பனாறு பாவோட்டம் இல்லையா பாய் போட்டா மல்லாந்தா படுத்தாப்பல

ஒறங்கிட்டா...!”

கடைசியில் அடிவயிற்றை அள்ளிக் கொண்டு வரும் சோகம் ஆதாரமற்ற பெருவெளியின் இழையாக உயர்ந்து அலைந்து பாய்கிறது. பொன்னாச்சியை அந்தச் சோக் அலைகள் தொட்டசைத்து நெஞ்சுருகச் செய்கின்றன.

‘சிவத்தாச்சி’ என்று ஊரும் உலகமும் குறிப்பிடும் இந்தப் பெண் பிள்ளைக்கு மற்றவர்களோடு என்ன தொடர்பு? இங்கே வந்து குந்தி வெற்றிலை போடும் முத் திருளாண்டி, பிச்சைக்கனி ஆகியோருக்கும் இவளுக்கும் என்ன உறவு? ஆச்சி ஊர்க்காரர் செம்பையும் பித்தளையையும் வாங்கி வைத்துக் கொண்டு வட்டி வாங்கி யாருக்காகத் தொழில் செய்கிறாள்? யாருக்காகப் பெட்டி முடை கிறாள்.

“பாய் போட்டா மல்லாந்தா. படுத்தாப்பல ஒறங் கிட்டா...படுத்தாப்பல ஒறங்கிட்டானே...!”

ஆச்சி புலம்பிப் புலம்பிக் கைகளை விரித்து விரித்து அந்தப் படத்தைப் பார்த்துக் கண்ணிர் பெருக ஒவென்று அழுகிறாள். பொன்னாச்சிக்கு நெஞ்சு குழைய, நா ஒட்டிக் கொள்கிறது. அவள் வாயில் வழியே உள்ளே செல்கிறாள்.