பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 கரிப்பு மணிகள்

யாரு?” அவள் வெளியே எட்டிப் பார்க்கிறாள். நெஞ்சம் குபிரெனப் பால் சொரியப் பூரிக்கிறது. ‘நீங்க இங்கத்தா இருக்கிறியளா?” “ஆமா...’ என்ற பொன்னாச்சி அவனை நோக்கும் விழி களில் மத்தாப்பு ஒளி சிந்த நிற்கிறாள். பிறகு சட்டென்று தன்னுணர்வுக்கிறங்கி, உள்ளே திரும்பி, ஆச்சி, ஆரோ வந்திருக்காவl’ என்று அறிவிக்கிறாள்.

ஆக்சியும் சட்டிலிலிருந்து திரும்பி வாயிற்படியில் அவன், நிற்பதைப் பார்க்கிறாள்.

“யாரு.ை..? வா...வந்து உட்காரு? யாரத் தேடி வந்: தேல...’ என்ற சொற்களால் அவனை வரவேற்பவள் அவனை விழிகளைச் சுருக்கிக் கொண்டு கூர்ந்து நோக்கு கிறாள்.

அவன் புன்னகையுடன் மீண்டும், “நீங்க இங்கத்தா இருக்கியளா?’ என்று கேட்டுக் கொண்டு சிவத்தாச்சி. காட்டிய பெஞ்சியில் அமர்ந்து கொள்கிறான்.

“யாரு? என்னியா கேக்கே? நா எம்புட்டு நாளாவோ இங்கத்தா இருக்கே. நீ எந்தப் பக்கம்...?’

“செவந்தியாபுரம்... சாத்தப்பன்னு இருந்தாவளே தொழில் சங்கக்காரரு, கேள்விப்பட்டிருக்கியளா? அவரு மகன்...ராமசாமி...’

மந்திரச் சொல்லால் கட்டுண்டாற் போல் செங்கமலம் அசையாமல் அமர்ந்திருக்கிறாள். மெளனம் மீண்டும் தன் கனத்த திரையைப் போட்டுவிடுகிறது.

பொன்னாச்சியோ கரை கட்டிய மேடெல்லாம் கரையத் தத்தளிக்கிறாள். இவர் எதற்கு வந்திருக்கிறார்...? அவளைத் தேடித்தான் வந்திருக்கிறார். கோபமில்லை கோபமே யில்லை...

அவள் வீட்டுக்குத் திரும்பப் பரபரத்து முயலுகையில் ஆச்சியின் குரல் அவளை இழுக்கிறது.