பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 159

கட்டிலுக்கடியில ஒரத்தில் ஒரு பனையோலைத் தட்டு, மாங்காய்த் தட்டு இருக்கிறது. அதை எடுத்து அதில் வெற்றிலை பாக்கு பழத்தை அவள் வைக்கிறாள்.

“ஏட்டி, உள்ளாற போயி அடுப்பில ரெண்டு செத்த போட்டு காபித் தண்ணி வையி. தாவரத்தில் காபித் துரளி ருக்கி, பானையில கருப்பட்டி இருக்கி, கிளாசில இறுத்துக் கொண்டா” என்று ஏவுகிறாள்.

“பழம் எடுத்துக்கலே...” என்று ஆச்சி தட்டை அவ னுக்கு நகர்த்துகிறாள்.

பொன்னாச்சி ஆகாயத்தில் பறக்கிறாள். இவர் இவ ளுக்குச் சொந்தமா? சிநேகமா? செவத்தாச்சி முட்களின் தடுவேயுள்ள இனிப்புக் கனியோ? இந்த ஆச்சியும் சின்னம் மாவைப்போல்...அவளைப் போல்...ராமசாமியைக் கண் டதும் உள்ளம் ஏன் இப்படிக் குதிக்கிறது? தேவதேவியர் பூச்சொரிவது போல் ஒரு குளிர்மை; அப்பனும் குழந்தை களும் விழாவுக்குச் சென்ற பிறகு, சின்னம்மா வேலையை விட்டு இன்னும் வராமலிருக்கும் இந்த நேரம்...

‘இந்த வுள்ள ஒங்க உறமுறையா?”

பழத்தை உரித்துத் தின்று கொண்டு அவன் கேட் கிறான்.

இல்ல. ஆமா. எல்லா ஒற முறதா. எல்லா ஒறமுற இல்லாத. இந்த வளவில இருக்கா. ஆத்தா செத்துப் போயிட்டா. அப்பன் அவ இருக்கறப்பவே இன்னொருத் தியத் தொடிசி வச்சிட்டா. அவதா சின்னாத்தா. பொம் பிளக்கு ஒருமுறை எது, எது ஒருமுற இல்ல? அம்மயப்பன் அண்ணந் தம்பி பெறந்த எடம் எதும் ஒருமுற இல்லாம போயிடுது. கலியாணமுன்னு ஒருத்தன் வந்திட்டா பெறந்த இடம் நீ யாரோ நானாரோ இந்தப் பாத்திக் காட்டு வேக் காட்டில பொம்பிளக்கி மனிச ஒறவு ஏது? எங்கியோ வாரா, யாருக்கோ பெத்து யாருக்கோ கொடுக்கா...ம், அது கெடக் கட்டும்லே, ஒனக்குக் கலியாணம் காச்சி ஆயிருக்கா?"