பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 16.1

“அப்படியெல்லாம் இல்லாச்சி. அவ என்னியோன்னு நினச்சிப் போடாதிய ஆச்சி நாச்சப்ப கண்ட்ராக்டு கிட்ட செருப்புக்காலத் தூக்கி உதச்ச ஒரே பொம்பிள1 இம்பட்டும் தெரிஞ்ச பெறகு ஒங்ககிட்ட சொல்றதுக் கென்ன? இவளுக்காவத்தா நா சண்டபோட்ட அவங்கூட. மொதலாளி எதிரில மோதிட்ட...” -

“அப்ப, இவளுக்காவ மொதலாளிகிட்ட மோதிட் டேன்னா, சிநேகம் ரொம்பத்தா? கெட்டிச்சிப் போடு. அவக்கும் யாருமில்ல. அப்பன், ககமில்ல. கண்ணுவெளங் கல. சம்பாதனை இல்ல, ஆனா நப்பாசை போகல. பொட்டக்கண்ண வச்சிட்டு இப்ப கொடையாக்கவா போயிருக்கா? குடிக்கத்தா போயிருக்கா. அவபொம்பிள, ஆறுமணிக்கு மேல அரவமில்லுல சோலி எடுத்தா ரெட் டிப்புக் கூலி வருமேன்னு போயிருக்கா. பத்துக்கோ பதி னொண்ணுக்கோ செத்துச் சுண்ணாம்பா வருவா. கலியா -ணத்தை முடிச்சி வய்க்கலாம்ல...”

பொன்னாச்சிக்கு அன்றிரவு அப்பன் குடிபோதையுடன் வந்ததோ, சின்னம்மா வந்து கத்தியதோ நடந்ததாகவே நினைவில்லை. அவள் மேக மண்டலத்தில் மிதந்து கொண்டி ருக்கிறாள். +

15

பொழுது விடிந்து விட்டது தெரியாமல் உறக்க மயக் கத்தில் தனி உலகம் படைத்து அதில் ஆழ்ந்து கிடந்த பொன்னாச்சியை சின்னம்மாவின் கோபக் குரல்தான் உலுக்கி விடுகிறது. -

‘கொடைக்குப் போறாறாம் கொடை! எந்திரிச்சி, புள்ள எந்தப் போலீசு கொட்டில கெடந்து அடிபடுறான்னு போய் பாரும் ! எந்திரிம்...’

பொன்னாச்சிக்குக் கருக்கரிவாள் பாய்ந்தாற்போல் துக்கி வாரிப் போடுகிறது.