பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 கரிப்பு மணிகள்

பொன்னாச்சி மாமனிடம் சென்று கூறிவிடுவதென்று நிச்சயம் செய்து கொள்கிறாள். == -

ஆனால் அதைச் சின்னம்மாவிடமோ, பெரியாச்சியிடமோ வெளியிடத் துணிவு இல்லை. -

நிழல் குறுக வானவன் உச்சிக்கு வந்து ஆளுகை செய் கிறான்.

அப்பன் வரவில்லை பொன்னாச்சி வேலைகளை முடித்து விட்டு முற்றத்துக்கு வருகிறாள். சொக்கு வீட்டில் புருசன் மட்டும் படுத்திருக்கிறான். வேறு அரவமில்லை. பாஞ்சாலி இரட்டைச்சடை குலுங்க, சரசியுடன் புளிய விதை கெந்தி ஆடிக் கொண்டிருக்கிறது.

“பாஞ்சாலி, வீட்டைப் பூட்டிட்டுப் போற. துறக்குச்சி வச்சுக்க, சின்னாச்சி வெறவு வாங்கியாரச் சொல்லிச்சி, பதனமாப் பாத்துக்க மருது ஆடிட்டிருக்கா தெருவில் பாத்துக்கறியா?” -

அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவள் விடுவிடென்று ஒட்டமும் நடையுமாக வருகிறாள். தெருக் கடந்து திரும்பி, இன்னும் வீதிகளைக் கடக்கிறாள். கடைகளும் வியாபாரச் சந்தடிகளும் நெருங்கும் இடங்கள் வருகின்றன.

புரும்புரும் என்று தெருவை அடைத்துக்கொண்டு திரும்ப முனகும் லாரிகள், மணியடித்துச் செல்லும் ரிக்ஷாக்கள். சாக்கடை ஒரத்துத் தேநீர்கடைகளில் கறுத்த பனியனும் பளபளக்கும் கிராப்புமாகத் தென்படும் சுறுசுறுப்பான ஊழியர்கள், வடையைக் கடித்துக் கொண்டு கிளாசில் தேநீரைச் சுழற்றி ஆற்றிக்கொண்டு உதட்டில் வைத்து. அருந்தும் தொழிலாளர் லாரியாட்கள், சிவந்த கண்கள், கொடுவாள் மீசைகள், கைலிகள், அழுக்குப் பணியன்கள் என்று அவளது பார்வை துழாவுகிறது தம்பி இங்கெல்லாம் இல்லை.

அவன் இந்நேரம் வீடு திரும்பாமல் இருப்பானா? அவன் போலிகக் கொட்டடியில் அடிபடுகிறான். இருநூறு