பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

780 கரிப்பு மணிகள்

செல்கிறது. ஞாயிற்றுக் கிழமை காலை நேரம்; சிறுமியர் தலையில் எண்ணெய் வழிய மண்ணில் குந்திப் புளிய விதை யாடுகின்றனர். கிழவிகள் நீர் வடியும் கண்களைச் சரித்துக் கொண்டு ஆங்காங்கு புகையிலையின் சுகத்தில் ஆழ்ந்தவராகக் குந்திக் கிடக்கின்றனர். பூவரசமரம் ஒன்று நிழல் தரும் கிளைகளால் அவர்களுக்கு ஆதரவு காட்டுகிறது. அதனடியில் இளந் தாயர் சிலர் மடியில் குழந்தைகளுடன் சாவகாசமாக வம்புளந்து கொண்டிருக்கின்றனர். ஒரு வீட்டில் ஒருத்தி குழந்தை குளிப்பாட்டுகிறாள்; புருசன் நீரூற்றுகிறான். இன் னொரு வீட்டில் அவள் அம்மியில் அரைக்க, அவன் கூரை செப்பம் செய்கிறான். இன்னோர் வேப்பமரம். அதன் அடி முண்டு அமர்ந்து சில ஆண்கள் ஏதோ பேசுகின்றனர். ஒரு பெண் பன ஒலை சீவிக் கொண்டு யாரையோ திட்டிக் கொண் -டிருக்கிறாள்.

“பனஞ்சோலை அளத்துல மாசச்சம்பளம் பார்த்த பைய. போன்னிட்டாவ; ஆத்தாளும் மவனும் இங்க வாரா...!”

‘மின்ன சங்கக்காக பிரிச்சிட்டுப் போவ வருவானே, நோட்டீசு கொண்டு குடுக்கல? தொழிலாளியல்லாம் ஒண்ணு

சேரணுமின்னு சேப்பு நோட்டிசு குடுத்தான். அளத்துல சீட்டக் கிளிச்சிட்டாவ!’

‘பணஞ்சோல அளத்துல அதெல்லாம் பேசப்படாது. ஊரே கெடந்து வேலக்கிப் போவாம நின்னாக்கூட, பனஞ் சோல அளத்துள மூச்சுப்பரியக்கூடாது. அங்கதா போனசு கண்ணாடி, செருப்பு, அல்லாம் குடுக்கறாவளே?... மானோம்புன்னா புள்ளயளுக்குப் பத்து ரூவா காசு குடுப்பா?”

நாலைந்து பெண்கள் இவ்வாறு பேசுவது அவன் செவி களில் விழுகிறது. வண்டியிலிருந்து கீழே குதித்து நடந்து வருகிறான்.