பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 185

.பிரிச்சானுவ...’ என்று அந்தப் பெண் வயிற்றெரிச்சலை எடுத்துரைக்கிறாள்.

‘நீ சும்மாருவுள்ள. இப்ப இவெ வந்திருக்கா. நாம போயித் தண்ணி வேணுன்னு அந்த ஆள கேரோ செய் யிவம்’ என்று அவன் உடலைத் துடைத்துக் கொண்டு கூறுகிறான்.

“கிளிச்சிய. நீரு அந்தத் தண்ணியப் போட்டுட்டு

ஆடுவிய’ என்று கூறிவிட்டு அவள் ஆத்திரமாகச் செல் கிறாள். s

அந்தக் கூட்டு வீட்டை விட்டு இங்கே விடுதலை பெற்று வந்தாற் போல் ராமசாமி உணருகிறான். பொன்னாச்சியை விரைவில் மணந்து கொண்டு இங்கே கூட்டி வந்துவிட வேண்டும் என்று நினைக்கையில் ஆனந்தமாக இருக்கிறது

தாய் புதிய வீட்டில் கல்லைக் கூட்டிச் சோறு பொங்கு கிறாள். மாலையில் அவன் சீவிச் சிங்காரித்துக்கொண்டு சண்முகக் கங்காணியைப் பார்க்கக் கிளம்புகிறான்.

தொழிலாளர் குடியிருப்புகளைத் தாண்டித் தேரியில் நடக்கிறான். ஞாயிறன்றும் வேலைக்குச் சென்ற சில தொழி லாளர் திரும்பி வருகின்றனர். பல பல உப்பளங்களில் வேலை செய்யும் தொழிலாளர் அனைவரும் சாலையிலிருந்து மணலில் கால் புதைய அந்தக்காட்டில் திரும்பித்தான் நடந்து செல்லவேண்டும். -

பொன்னாச்சியும் இப்படித்தான் வரவேண்டும்...ஆனால் முன் போல் குறித்த நேரத்தில் வேலைக்குச் சென்று வந்து குறித்த இடத்தில் அவனால் அவளைச் சந்திக்க முடியாது. எப்போது வேண்டுமானாலும் அவனுக்கு வேலைக்குப்போக வேண்டியிருக்கும்.

லாரி எப்போது வரும் என்பதைச் சொல்ல முடியாது. எழுபத்தைந்து கிலோ மூட்டைகளைச் சுமந்து லாரியில் அடுக்க வேண்டும்.மாசம் இருநூறு ரூபாய் தருவதாக

அவர்கள் அவனை வளைக்கப் பார்த்தார்கள். அவனுடைய