பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 187

“மன்னாப்பு: அவிய தலவரில்ல.” s “பின்ன ஆரு தலவரு’ - “தலயா எல்லா இருந்தாலும் புண்ணியமில்லை. வெறுங்கையுமாயிருந்தாலும் புண்ணியமில்ல...வட்டுக் கடன் செவத்தாச்சி குடுத்திச்சாக்கும்’

செவத்தாச்சியிட்டவும் அம்புட்டுக்குப் பணமில்ல. அடவுல கெடந்த சோடுதவலயக் கடயில போட்டுப் பொரட் டிக் குடுத்திச்சி. பாஞ்சாலிக்கு அடுவான்ஸ் குடுத்தா.

எல்லாந்தா...’

•s

அப்பச்சி என்ன பண்ணுறா?”

‘அவியளும் பொட்டி செமக்கப் போறா. கங்காணி நூறு பொட்டி செமந்தா நாலு ருவா தருவா.”

பொருளாதார நிலையை இவ்வாறு கண்டறிந்தபின் அவன் மனம் சிலை, தாலி. ரெண்டேனம் வாங்கிக் கல்யாணம் செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து பார்க்கிறது. * -

“அடுத்த நாயித்துக்கிழமை நா அங்கவாரேன். ஒங்கள் மாமா வந்திருந்தாரா?’

பொன்னாச்சி புரிந்து கொண்டு மறுமொழி கூறுகிறான். “ம்ாமா வந்து செவத்தாச்சியப் பார்த்தாராம். நாங்க ஆரும் அவிய வந்தப்ப விட்டில இல்ல. ஆச்சியே எல்லாம் சொல்லிவிட்டாவளாம்.’ -

“ஆகா...’ என்ற ஒலி அவனையுமறியாமல் அவன் கண்டத்திலிருந்தும் பிரிகிறது. பிறகு பேச்சுத் தொடர வில்லை. அவன் அவர்கள் பின்னே கந்தசாமியின் சாயாக் கடை வரையிலும் செல்கிறான்.

பிறகு அவர்கள் திரும்பி நெடுந்தொலை சென்று

மறையும் வரையிலும் அங்கேயே நிற்கிறான். ஒரு “சாயா

கேட்டுக் கொண்டு பெஞ்சியில் அமருகிறான். அப்போது ஆறுமுகமும் அங்கு வந்து சேருகிறான்.