பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 கரிப்பு மணிகள்

“நீ இங்கத்தா இருக்கியா? லாரி ஏழரைக்கு வரும். நீ பாலத்தடியில வந்திரு’ என்று கூறிவிட்டுப் போகிறான்.

அன்றுமுதல் முதன்முதலாக ஆறுமுகக் கங்சாணியுடன் மூட்டைத் தொழில் செய்ய வந்து நிற்கிறான் ராமசாமி. பாலத்தின் பக்கம் செந்திலாண்டவன்’ என்ற பெயரைக் காட்டிக் கொண்டு லாரி உறுமிக் கொண்டு வந்து நிற்கிறது. ஆண்களும் பெண்களும் அந்தத் தொட்டியில் ஏறிக் கொள் கின்றனர். மன்வெட்டி, கூடை, சாக்கு, கோணி தைக்கும் ஊசிகள், சணல்கண்டு எல்லாம் இடம் பெறுகின்றன.

நிலவு மூளியாகக் கிழக்கே உதித்து ஏறுகிறது. ஒட்டு, பவனுக்கு அருகில் அமர்ந்திருக்கும் தரகனார் கையைக் காட்ட அளத்துக்குள் வண்டி செல்கிறது. “கனா மானா அளம்” என்று யாரோ செய்தி அறிவிக்கின்றனர்.

அளத்துக்குள் நல்ல பாதை இல்லை. பள்ளத்திலும் மேட்டிலும் சக்கரங்கள் மாறி உருளுகையில் குடல் வாய்க்கு வந்து பாதாளத்தில் குதிப்பது போலிருக்கிறது. ராமசாமி இத்தகைய sorrif சவாரிக்குப் பழக்கப்பட்டவனல்ல. அவனருகில் ஒரு பெண்பிள்ளை அவன்மீது வேண்டுமென்று. விழுவதுபோல் தோன்றுகிறது. விலகிப் போகிறான். அம்பாரம் பத்தெட்டில் இருக்கிறது. நிலவு ஏறியிருப்பதால் வெளிச்சத்துக்கு விளக்கொன்றும் தேவையாக இல்லை. தொலைவில் அறவைக் கொட்டடியில் விளக்கொளி தெரி கிறது.

சங்காணி நிறுவைக் கொக்கியைத் தொங்கவிடுகிறான். திமுதிமுவென்று ஆண்களும் பெண்களுமாக மலையைப் புன்னி எடுத்து வாய் பிளக்கும் சாக்குகளில் கொட்டுகின்றனர். தரகனும் அளத்துக் கணக்கப்பிள்ளையும் பேசிக்கொண்டு, நிற்கின்றனர்.

சரேலென்று கங்காணியிடம் வந்து மூட்டைகளை முக்காலாக்கி மடித்துத் தூக்கச் சொல்கிறான் தர்கன். நெருப்புக் குச்சியைக் கிழித்து ஆறுமுகம் பார்க்கிறான்.