பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 189

50 கிலோ...

சின்னமுத்து இன்னும் ஒரு பெட்டி உப்பை மூட்டையை விரித்துக் கொட்டுகிறான். சரசரவென்று கைகளைக் குத்தும் பருமணிகள்.

“வாணாம், கொட்டாதியl’ என்று தரகன் குரல் கொடுக்கிறான்.

“ஏன்?...” எல்லோருடைய குரலும் ஒன்றாக உயரு கிறது,

‘அம்பது கிலோ மூடைதா!”

“அப்ப கூலி அதேதான?

அதெப்படி அம்பதும் எழுபத்தஞ்சும் ஒண்ணாவும்: அம்பதுன்னா தூக்கிப் போடுறதுக்கு அடுக்கறதுக்கு சல்லி சாவும்...விரிசா வேல முடியும்...” என்று வித்தாரம் பேசு கிறான் தரகன். -

சமூடை எல்லாம் ஒண்ணுதான்? கூலி அதே பத்தொம்பது. பைசாதான?’ என்று சின்னமுத்து கேட்கிறான்.

அதெப்படியாவும் அம்பது கிலோ மூட்டைக்கு ஒம்பது பைசா கூலி, மூடை நிறையக் காணுமில்ல?” *

இர்வின் அமைதியில் கடல் நீரில் தோய்ந்து வரும் குளிர் காற்று உடலுக்குச் சுகமாக இல்லை. அது குளிர் திரியாகப் பாய்ந்து உடலைக் குலுக்கிக் கொள்ளச் செய்கிறது. ராமசாமி குரலெழுப்புகிறான்.

“ஏன்வே, பச்சைப்புள்ளியளா நாங்க, விளையாடுறீம்? நூத்தம்பது கிலோ ரெண்டு மூடை முப்பத்தெட்டுப் பைசா. அம்பது கிலோ மூடை மூணுக்கு இருவத்தேழு பைசா ஓங்க ஒரியாவரமெல்லாம் இங்க செல்லாது. கொரச்ச துட்டுக்கு அதிக மூடை...! இந்தாங்க ஆரும் உப்பத் தொடாதிய? போட்டா இத்தினி நாளும் வழக்கத்துல இருக்கிறாப்பல எழுவத்தஞ்சி’ கிலோ, ப த் தொ ம் ப து “ இல்லேண்ணா..."