பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 கரிப்பு மணிகள்

“இல்லேன்னா தொடாதிய, போங்க! இப்ப நேத்து முந்தாநா இதோ அம்பது கிலோ மூடை பத்து லாரி அடிச்ச. ஆளா இல்ல?” என்று தரகன் வீராப்புப் பேசு கிறான்.

ஆறுமுகமோ சங்கடத்துடன், ராமசாமி, தவறாறு: பன்னாதப்பா, இப்ப இப்பிடித்தா அம்பது கிலோன்னு மூடை போடுறா. இதா வழக்கமாப் போச்சு!” என்று அவனைச் சமாதானம் செய்கிறான். -

கங்காணிக்கும் கூலி குறையுமே!

‘அண்ணாச்சி, வந்தது வரட்டும். இன்னிக்குப் போரா டத்தாம் போறம். இது ரொம்ப ஏமாத்து. அப்ப மூடைக்குப் பதிமூணு காக குடுக்கட்டும்?’


‘அட்வான்ஸ் வாங்கிட்டு உப்பத் தொட மாட்டமுன்னா, எவுள்ளியளா? சாக்கப் புடிச்சி உப்பைக் கொட்டுங்க! நேத்து முந்தாநா அம்பதுக்கு நீங்க துட்டு வாங்கல? இந்தப்பய பனஞ்சோல அளத்துல தவராறு பண்ணிட்டு இங்க வந்திருக்கர். இவனைச் சேத்ததே தப்பும். ஆவட்டும்”

தரகன் குரல் ஓங்குகிறது. கங்காணியும் சேர்ந்து கொள்கிறான்.

“அளத்துல லாரி வந்து நிக்கிது; இப்ப என்ன தவராறு’ அம்பதுன்னா அம்பதுதான்...”

“இது அநியாயம். ஏமாத்தல்...”

‘ராமசாமி மொத நாளே நீ மொறச்சா போச்சு: ஒனக்குதா நட்டம்.

“அண்ண்ாச்சி, இங்கக்கே இது. நாயமாத் தோணுதா? . நாம ஒத்துமையா இருந்துதா இவனுவ அக்கிரமத்த முறிக்கணும். எழுபத்தஞ்சு கிலோ மூடைதானே வழக்கம் முறை? இது அநியாயக்கூலிக் குறைப்பு இல்லையா? என்று ராமசாமி பொங்குகிறான்.