பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 கரிப்பு மணிகள்

“நேத்து நீ உப்பெடுக்க வந்தியா?”

நா வரல. மாமா. தீர்வ கட்டலன்னு முனுசிப்பு ஆளுவ உப்பள்ள வாராவன்னாவ ஆச்சி புருவருத்திட்டி ருந்தா...’ *

அவர் திடுக்கிட்டுப் போகிறார். அவர் வீட்டி ஆச்சி யைப் பார்க்கவில்லை. சட்டையைக் கழற்றி மாட்டி விட்டு, அறைச்சாவியை எடுத்துக் கொண்டு வந்தார்.

அவர் உடனே பரபரப்பாக அளத்தை நோக்கி விரை கிறார். * = o

முனிசிப்பு அவ்வளவுக்குக் கடுமை காட்டிவிடுவாரோ? யாரும் வந்திருக்கவில்லை. சுற்றிச் சுற்றிப் பார்க்கிறார்” அவர் வரப்பில் வாரி ஒதுக்கிய உப்பு அப்படியே தானிருக் கிறது. தீர்வை கட்டவில்லை. இரண்டாண்டுத் தீர்வை பாக்கி இருக்கிறது. அது மட்டுமில்லை. வரும் ஆண்டுடன் குத்தகையும் புதுப்பிக்க வேண்டும். இருநூறு ஏக்கர் கூட்டுறவு உற்பத்தி நிலம் என்று பேர் வைத்துக் கொண்டு பத்து ஏக்கர் கூட உற்பத்தி செய்யவில்லை என்றால் குத்தகையை ரத்து செய்து விடுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் உண்டு என்று அவர் தெரிந்து வைத்திருக்கிறார். அந்த அச்சம் வேறு ஒரு புறம் அவருள் கருமையைத் தோற்று விக்காமல் இல்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் மேல், அப்படி யெல்லாம் நடக்காது என்ற ஓர் தைரியம் அவருக்கு எப்போதும் இருக்கிறது. .

தங்கபாண்டியிடம் கோபம் வருகிறது.

  • ஏன்ல ப்ொய் சொன்ன?. “நா ஆச்சி சொன்னதைக் கேட்டுச் சொன்ன, அப்ப இன்னிக்கு வாராவளா இருக்கும்...” - :அவெ உப்ப அள்ளி ஒனக்குக் கொள்ளா வெலக்கிக்

குடுப்பான்னுதான் சிரிக்கே?” -

முன் மண்டையில் முத்தாக வேர்வை அரும்புகிறது. அவருக்கு.