பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 195

கோவிச்சுக்காதிய மாமா வண்டி கொண்டாராட்டுமா உப்பள்ளிப் போகட்டுமா?”

“எலே.இங்கி வாலே...ஒங்கிட்ட ஒரு ஒதவி வேணும்.”

அருணாசலம் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு முன் மண்டையைத் துண்டால் ஒத்திக் கொள்கிறார்.

“சொல்லு மாமா!’

“ஒரு அந்நூறு ரூவா வேணும்ல. வட்டுக் கடனாக் குடுத்தாலும் சரி...’

அவனுடைய கண்களில் ஒளிக்கதிர்கள் மின்னுகின்றன.

“இப்ப மொட்யா மாமா? வட்டுக் கடன் வாங்கித் தீர்வை கட்டவா போறிய?”

‘'வேற மொடயும் இருக்குலே. ஒங்கிட்ட இருக்குமா?”

‘அண்ணாச்சிட்டத்தா கேக்கணும் எப்படியும் இந்தப் புரட்டாசிக்குள்ள மழக் காலம் வருமுன்ன கலியாணம் கெட்டி வய்க்கணும்னு மயினியும் சொல்லிட்டிருக்கா. பொண்ணு.

ரெண்டு மூனு பாத்து வச்சிருக்கா, ஆனா எனக்குப் பிடித்த மில்ல...’ -

“புடிச்ச பொண்ணாப் பாத்துக் கெட்டு, ஒனக்குப் பொன்னா இல்ல?”

‘ஒங்கிட்டச் சொல்றதுக்கென்ன மாமா? பொன்னாச்சிப் புள்ளயத்தா மனசில இட்டமாயிருக்கு...’

‘ஒங்கிட்டப் பணம் இருந்தாக் குடு. இல்லேன்னா வேற தாவுலன்னாலும் ஏற்பாடு பண்ணித்தாலே. ஊரூரு பஸ் சார்ச்சி குடுத்திட்டுப் போயி அவனவங்கிட்டத் தீர்வை பிரிக்க வேண்டியிருக்கு. ஒரு பய கண்ணுல அம்புடறதில்ல. வேலை செய்யிறா, நல்ல துணி போடுறா, பொஞ்சாதிப் புள்ளய கூட்டிட்டுச் சினிமாவுக்குப் போறா. இதுக்குத் தீர்வை ரெண்டு ரூபா குடுக்கணும்னா இப்ப கையில பைசா இல்லைன்றா, இது கூட்டுறவா? கமிட்டிக்கார, பேர்