பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாஜம் கிருஷ்ணன் 17

பன ஒலை கொண்டு வேயப்பெற்ற அந்தக் கொட்ட கையில் உள்ளே சந்து சந்தாக வெய்யில் விழுந்து அவர்கள் உணவு கொள்வதைப் பார்க்கிறது, மேல வெயில்...தள்ளி ஒக்காரும்” என்று மருதாம்பா அவனை நகரச் செய்கிறாள். பிறகு உணவுப் பாத்திரத்தைத் திறந்து, ஒரு வெங்காயத் துண்டையும் பச்சை மிளகாய்த் துண்டையும் கேழ்வரகுக்

களியின் உருண்டையையும் அவன் கையில் வைத்துக் கொடுக் கிறான்.

தகக்கப் பெறும் உணர்வுகள் அலையலையாக உந்த, உள்ளத்து விம்மல் வெளிப்படுகிறது. “நீ தேடிச் சோறு போட ஒக்காந்திட்டேன் பாத்தியா?” என்று விம்மு கிறான்.

‘பேசாதிரிம்...’ என்று இரகசியக் குரலில் கடிந்து கொள் கிறாள் மருதாம்பா.

அங்கே வேலை செய்யும் அனைவருக்குமாக ஒரு பானை தண்ணிர்தான் குடிப்பதற்கு வைத்திருக்கிறார்கள்.

‘ஏத்தா மொவத்தத் தொழில கழுவிக்கிறதுக்கென்ன...” என்று சிவந்தகனி யாரையோ சண்டை போடுகிறான்.

நானென்ன சொம்பு தண்ணியா எடுத்த ஒரு'கிளாக,

ஓங்காருவாரு துாள் பறக்கு...’

“இந்த அளத்துல தாவில முன்ன பளஞ்சிபுர அளத்துை குடிக்க ஒரு சின்ன பக்கெட்டி தண்ணிதா வரும், அம்புட்டுப் பேரும் அத்தத்தா குடிக்கணும். ஒரு செறட்ட நீரு கெட்ய்க்காது செல நா. சித்திரக்கோடையில கெடந்து எரியுவம்...” என்று ஒரு கிழவி திருப்திப்படுகிறாள்.

கும்பியின் எரிச்சலைச் சோறு சற்றே தனித்தாலும், தண்ணிர்த் தாகம்...!

“எல்லாம் குடிச்சிப் போடாதிய” என்று சொல்லிக் கொண்டே அவர்கள் தங்கள் தங்கள் தூக்குப் பாத்திரங்களில் சிறிது நீரை வாங்கிக் குடிக்கிறார்கள். சிவந்தகனிதான் பம்டுே செய்கிறான். ‘ந்திரி...ஊத்து...’ என்று கிழவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/20&oldid=657396" இலிருந்து மீள்விக்கப்பட்டது