பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 கரிப்பு மணிகள்

பார்கள். கல்யாண மென்றாலும் பணம் இருநூற்றைம்பது கொடுப்பார்கள். மாமனுக்குக் கஷ்டம் அதிகமிருக்காது... பிறகு... -

சாயாக்கடைப்பக்கம் ராமசாமி நின்று ஒரு சிரிப்பைத் சிந்துகிறான். அவனருகில் இன்னும் பல இளைஞர்கள் சூழ்ந்திருக்கின்றனர். -

‘எதும் விசேசமா?’ என்று அவன் கேட்கும்போது அவர்கள் எல்லோரும் சிரிக்கிறார்கள். அவளுக்கு ஏதோ மணமேடையில் மற்றவர் கேலி செய்வது போல நாணம் கவிகிறது. -

பாஞ்சாலி வெடுக்கென்று, “இன்னிக்கு இனிஸ்பெட்டர் வந்தாவ, எங்கள எல்லாம் கொட்டடிலிலேந்து அந்தால பம்ப்கொட்டடி தாண்டி கோயில் செவர் மறப்புல ஒக்காத்தி வச்சிட்டா...’ என்று சேதி தெரிவிக்கிறாள்.

“யாரு இனிஸ்பெட்டரு? போலீசா வந்திச்சி’ என்று அங்கு எட்டிப் பார்க்கும் ஒருவன் விசாரிக்கிறான்.

‘அட, இல்லப்பா, லேபர் இனிஸ்பெட்டர் வந்தி ருப்பா. பிள்ளங்களை ஒளிச்சி வைப்பா! என்று ராமசாமி விளக்கம் கூறுகிறான்.

என்னக் கங்காணி அடிச்சிட்டார்; தொழியத் தொறந்து வுடுன்னு அவியதா சொன்னா. பொறவு ஏண்டா தொறற் தேன்னு அடிச்சா. வேற தொழியல்ல தொறக்கச் சொன் னேங்கா மூக்குலேந்து ரத்தம் வந்திச்சி’ என்று பச்சை செய்தி தெரிவிக்கிறாள்.

“இருக்கட்டும். எல்லாத்துக்கும் விடிவு காலம் வரும். நாமல்லாம் கோரிக்கை குடுப்பம் ஞாயிற் றுக்கிழமை வாரம்...’

பொன்னாச்சிக்குப் பூமியில் கால்ப்ாவி நடப்பதாகவே தெரியவில்லை. வீட்டுக்குள் அவர்கள் நுழைகையில் அவர்கள் வீட்டு முற்றத்தில் இருள் பரவும் அந்த நேரத்தில் யாரோ கையில் பையுடன் நிற்கிறான். அரை