பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 203

யையும் தாண்டி நீடிப்பதுண்டு. ஆனால், மழை மணி விழுந்தால் உப்பு விலை ஏறும். தொழிலாளருக்கு வேலை கடுமையாகும். மழை அவர்களுக்குச் செழிப்புக்கும் வண்மைக்கும் பயன்படாததாகத் தொழிலை முடக்கி, முதலாளிகளுக்கு லாபத்தைக் கொண்டு வரும். அந்த லாபம் தொழிலாளருக்கு உபரியாக வண்மை கூட்டாது. எனவே அந்தக் காலங்களில் மிகத் தீவிரமாக உப்பை வாரித் தட்டு மேடுகளில் சேர்ப்பதும், மழையில் கரையாமல் ஒலைத் தடுப்புப் போடுவதும், அல்லது விரைவாக விற்று மூட்டை களாக்கி விலை ஏற்ற காலத்தில் அம்பாரங்களைக் கரைப்பது மாகப் பணிகள் நெருக்கும். - -

இந்தக் காலத்தில் தொழிலாளர் அனைவரும் திரண்டு மேலிடத்துக்குத் தங்கள் கோரிக்கைகளை வைத்தால்? முக்கியமாகப் பணஞ்சோலை அளத்திலும் தொழிலாளர் ஒன்றுபட வேண்டும்!

ஞாயிற்றுக்கிழமை வாரன்” என்ற சொல் பொன்னாச்சி யின் செவிகளில் ஒலித்துக் கொண்டுதாணிருக்கிறது. சின்னம்மா, அதிகாலையில் நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரையிலும் உப்பு அறைவை ஆலையில் அதிகப்படி வேலை என்று மூன்று மணிக்கே எழுந்து போகிறாள். சரசிக்கு செங்கமலத்தாச்சியின் வீட்டில் படுக்கை, அதிகாலையிலேயே பொன்னாச்சி எழுந்து கிணற்றிலிருந்து தண்ணிர் இறைத்து வந்து நிரப்பி, வீடு பெருக்கி, பாண்டம் கழுவித் துப்புரவு வேலைகளில் ஈடுபடுகிறாள். அப்பன் எழுந்து பின்புறம் செல்கிறார். - செங்கமலத்தாச்சி வழக்கம்போல் வாயிற்படியில் அமர்ந்து சாம்பற் கட்டியை வைத்துப் பல் துலக்குகையில், ராமசாமி, பழனிவேலு, மரியானந்தம், மாசாணம் எல்லோரும் வருகின்றனர்.

‘ஒங்களப் பாத்துப் போகத்தா வந்திருக்கம் ஆச்சி...” என்று ராமசாமி புன்னகை செய்கிறான்.

“எல, பொய் சொல்லாத பொய் சொன்னா அரக் கஞ்சி யும் கெடக்காது!"