பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 கரிப்பு மணிகள்

அவன் கலகலவென்று சிரிக்கிறான். கண்கள். சிவந்து இருக்கின்றன. முடிசிவி, புதுமையாக அவன் தோற்றமளித் தாலும் தூங்கியிராத அயர்வு.அவன் முகத்தில் தெரிகிறது,

சத்தியமா ஆச்சி, ஒங்களத்தா பார்க்க வந்தது. இங்க, தொழிலாளர் பொண்டுவள ஒண்ணு சேக்கணுமின்னு. ஒங்களத்தா கேக்க வந்தே...’ -

பொண்டுவள ஒண்ணு கேக்கறதா? ஆதிநாள்ளேந்து அது முடியாத காரியமின்னு தீந்து போயிருக்கே. ஒனக்குத். தெரியாதால’ என்று கேட்டுவிட்டு ஆச்சியே பதிலையும் கூறிக் கொள்கிறாள்.

“ஆனா ஒனக்கெப்படித் தெரியும் ஒங்கப்பச்சிக்கு ஆத்தா முதல்லியே செத்திட்டா. அவியளோட பொறந்த, வெல்லாம் ஸ்லோன்ல கெடக்கா. மாமி நாத்தி மயினி சண்டை, சக்களத்தி சண்ட ஒண்ணும் பாத்திருக்க மாட்ட. பொண்டுவள ஒண்ணு சேக்கணுமின்ற; அது ஆவாத காரிய

மல்ல!’ o

“ஏட்டி சரசி! ரூம்ப பெருக்கிப் போடுறி: ஆச்சி மகிழ்ச்சி யான நிலையில் தானிருக்கிறாள் என்று ராமசாமி புரிந்து கொள்கிறான்.

சரசி பரபரவென்று முன்னறையைப் பெருக்கித் தள்ளு. கிறாள். பாதி முடைந்த ஒலைப் பெட்டியை நகர்த்தி வைத்துப் பெஞ்சியைத் துப்புரவாக்குகிறாள்.

‘வாங்க, உள்ள வந்து இரிங்க...’

செம்பு நீரெடுத்துப் பின்புறம் சென்று வாய் கொப்புளித்து விட்டு சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு வருகிறாள். -

நெற்றியில் நீண்ட பச்சக்கோடு. இடது புறங்கையில் ஒரு யாகசாலைக் கோலம். கைத்தண்டின் உட்புறம் மூன்றெழுத்துக்கள் தெரிவதை ராமசாமி கவனிக்கத் தவற வில்லை. அது முத்திருளாண்டியின் பெயரல்ல. அவர்கள் பெஞ்சியில் அமர்ந்து கொள்கின்றனர்.