பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 கரிப்பு மணிகள்

படுத்திருப்பான்; உட்கார்ந்து பேகவான், படிப்பான். அவன் போன பிறகு அவள் இட்லி தின்பதையே விட்டுவிட்டாள். பையன் தேநீர் கொண்டு வருகிறான். அதை அவளே அவர் களுக்கு எடுத்துக் கொடுக்கிறாள்.

‘நீங்க ஒண்ணும் எடுத்துக்கலியே ஆச்சி’ “நா சாயா குடிக்கமாட்டே. இதா கருப்பட்டி போட்டு நீரு கொதிக்கவச்சி ரெண்டு காப்பித்துரளப் போட்டு எறக்கி: வச்சிடுவ. அதுதா. வெத்தில பொவயில. நா இட்டிலி டீத்தண்ணி ரெண்டும்...’ தொண்டை கம்மிப் போகிறது. எழுந்து வெளியே செல்கிறாள். o

“ஏட்டி ப்ொன்னாச்சி? இங்ஙன வாட்டீ மாப்பிள வந்திட்டான்னு ஒளிஞ்சிக்கிற?...சின்னாச்சி என் சேறா?’

“அப்பச்சியக் கூப்பிடுடி!’ :சின்னம்மர் வெள்ளெனவே அறவ மில்லுக்குப் போயி: ருக்காவ, இத வந்திருவா. அப்பச்சி பல்லு வெளிக்கிட்டிருக்

‘அவியல்லாம் தொழில் சம்பந்தமா பேச வந்திருக்கா ஒரு விடிவுகாலம் வராண்டாமா? பொண்டுவதா கூடிச் சேரணுமின்னு வந்திருக்கா. பாஞ்சாலியவுட்டு இந்த வளவில இருக்கிற அளத்துப் பொண்டுவ, வித்து மூடக்காரவுக எல்லாரையும் கூட்டிட்டு வாரச் சொல்லு? செவந்தகனி’ மாதா கோவிலுக்குப் போறவுல இசக்கிமுத்து, ஜீனத்து வாராளே, அவ அண்ண, எல்லாரிட்டயும் ஆச்சி கூட்டியாரச் சொன்னான்னு சொல்லு...’

சற்றைக்கெல்லாம் அங்கே திமுதிமுவென்று கூட்டம் கூடி. விடுகிறது. முற்றத்தில் வந்து ஆங்காங்கு குந்துகின்றனர்.

‘மூடை அம்பது கிலோன்னு போட்டுக் கூலியைக் குறைச் சிட்டாங்க. ஒம்பது புைச்ான்னு, அதைச்சொல்லணும்?” என்று இசக்கிமுத்து நினைவுபடுத்துகிறான். டி

“இப்ப நாம முக்கியமா இதுவரய்க்கும் சேராத ஆளு. களைச் சேர்க்கிறதர் பார்க்கணும். பணஞ்சோல அளத்துத்