பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 கரிப்பு மணிகள்

இருந்தாலும் ஆச்சி கொடுத்த நோட்டை வாங்கிக் கொள்கிறான் ராமசாமி. அதில் ஒவ்வொரு கோரிக்கையை யும் கேட்டு அவன் எழுதிக் கொள்கிறான். -

நண்பகல் கடந்து வெயில் இறங்கும் வரையிலும் அவர்கள் பொழுது போவது தெரியாமல் பேசுகின்றனர். பிறகு ஒவ்வொருவராகக் கலைந்து போகின்றனர்.

பொன்னாச்சி உள்ளே சோறு வடிப்பதும், வெளியே வந்து பேச்சைக் கேட்பதுமாக அலைபாய்கிறாள். எல்லோரும் கலைந்த பின்னரே நினைவுக்கு வருகிறது. பாஞ்சாலிதான் கவலையுடன் கேட்கிறது, ‘அக்கா, அம்மா ஏ இன்னும் வரல? அறவை மில்லுக்குப் போயிட்டுக் காலம வந்திடுமே ஏ வரல...’

அடிமண் ஈரமாகக் கை வைத்ததும் பொல பொல வென்று சரிந்தாற்போல் ஓர் உணர்வு குழிபறிக்கிறது.

‘சின்னம்மா பொழுது சுவருக்கு மேல் ஏறியும் ஏன் வரவில்லை?”

“அப்பச்சி சின்னம்மா வரயில்லை...? பச்சயப் போயிப் பாக்கச் சொல்லலாமா? செவந்தகனி மாமனக் கூப்பிடுe...”,

அவள் வாசலுக்கு வருகிறாள். செங்கமலத்தாச்சி வாயிற் படியில் நிற்கிறாள். சைக்கிளை வைத்துக்கொண்டு ஒரு ஆள் அங்கு ராமசாமியிடம் ஏதோ கூறிக்கொண்டிருக்கிறான்.

அவன் முகம் கறுக்க அவர்களை நாடி வருகிறான்.

பேச்சியம்மன் அளத்துல காலம ஆரோ லாரி அறபட்டுப் பொம்பிள கெடந்தாளாம். ஆசுபத்திரில போட்டி ருக்காம். இவ விசாரிச்சிட்டு வந்திருக்கா...சின்னாச்சி கருவேலக் காட்டு அளமில்ல’

“ஐயோ...!” என்று ஒலி பீரிட்டு வருகிறது.

‘சின்னம்மா...சின்னம்மா அங்கதா அதியப்படி, வேலன்னு போனாவ....சின்னம்மா...’ -