பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 209

பாஞ்சாலியும் சரசியும் அக்காவின் அழுகையொலி கேட்டு விம்மி அழத் தொடங்குகின்றனர். கண்ணுசாமியோ இடி விழுந்தாற்போல் உட்கார்ந்து விட்டான்.

சோறு வடித்து, தட்டுப் போட்டிருக்கிறாள். சாப்பிட உட்காரவில்லை. எல்லோரையும் பெரியாகபத்திரிக்கு அழைத்துச் செல்கிறான் ராமசாமி.

20

அவர்கள் செல்லுமுன் போலீசு விசாரணை போன்ற சடங்குகளெல்லாம் முடிந்துவிட்டது. சடலத்தைக் கிடங்கி விருந்துதான் எடுத்து வருகின்றனர். , மருதாம்பாளின் முகம் என்று அடையாளமே தெரியவில்லை. முடியெல்லாம் பிய்ந்து குதறப்பட்டிருக்கிறது. மாமிக்கு முடி வெண்மையும் கருமை யுமாக இருக்கும். சின்னம்மாவுக்குக் கருமை மாறாத முடிஅது சிதைந்து கூழாகி உருப்புரியாமல்...லாரியில்'முகம் நகங்கி விட்டதா?

பொன்னாச்சி லாரியில் அடிபட்ட உடம்பை அதுவரை யிலும் பார்த்ததில்லை.

“ஐயோ. சின்னம்மா! அவள் துயரம் பொங்கி வரக்கதறி அழுவதைக் கண்டு குழந்தைகள் எல்லோரும் கதறுகின்றனர். “இது லாரி மோதலல்ல. அறவை மில்லுல அடிபட்டு விழுந்திருக்கா. வெளிலே பாதையில அடிபட்டு விழுந்தான்னு சொல்றாவ. பொய்யி. அறவை மில்லுல மிசின் பில்ட்டில மாட்டியிருக்கும். அதா விசாரணை எல்லா அதுக்குள்ள ஆயிரிச்சி. ஞாயிற்றுக்கிழமையாதலால் அதிக ஆட்கள் நடமாட்டமுமில்லை. கொண்டு வந்து வெளியே போட்டு லாரியில் அடிபட்டிருக்கிறாள் என்று சொல்லியிருப்பார்கள்’ என்று ராமசாமியும் தனபாண்டியனும் பேசிக் கொள் கின்றனர். -

வாயைத் திறந்து பேசமாட்டாள். பேசினால் . சாட்டையடிபோல் இருக்கும். அந்தச் சிம்னம்மா உப்பளத் துக்கே இரையாகி விட்டாள்.