பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 கரிப்பு மணிகள்

உப்புத் தொழிலாளிய எல்லாரும் பாஞ்சாலியளா நிக்கிறாப் போல தோணுது...’ தொண்டை கம்மிப் போகிறது.

சரசி! லோட்டாவில குடிக்கத் தண்ணி கொண்; டாம்மா!’

அவர் தண்ணிரருந்துகையில் ஆச்சி மெளனமாக இருக் கிறாள். -

“எனக்குத் தெரிஞ்சு அளக்கூலி நாலணாவிலேந்து நாலு: ரூவா வரையிலும் உசந்தும் அரக்கஞ்சியே பிரச்சினையாகத் தானிருக்கு...’

ஆச்சி உடனே கேட்கிறாள்.

“அதுக்காவ எதுவும் நின்னு போயிடுதா? மனுசன் வயசாகாம நிக்கிறானா? புள்ளய பெறக்காம நிக்கிதா? நீங்க காலத்துல எதானும் ஏற்பாடு செஞ்சு பொன்னாச்சிக்கும் ஒரு கலியாணங் கெட்டி வச்சிரணும். நம்ம இல்லாமயும் இருப்பும் அடிபிடியும் எப்பவுமிருக்கு. அந்தக் குடும்பத்துக்கு இப்ப ஒம்மத் தவிர ஆருமில்லாம போயிட்டா. கடல்ல அல ஒயுமா? அலயிலதா குளிச்சி எந்திரிக்கணும். அவெ ஆத்தா கிட்டச் சொல்லுலேன்ன, வாணங்கா?

“நானும் அன்னிக்குப் போனே. எங்கிட்டயும் அதாஞ்: சொன்னா நா ஒரு இருபத்திரன்டு நா; மாசம் கழியிட்டும்னு தானிருக்கே. அவ அம்மா தாலி இருக்கு. தாலிப் பொன் வாங்கறாப்பல கூடல்ல...இன்னிக்கு நிலைமை இல்ல ஒரு சில வேட்டி வாங்கி முடிச்சிடலாம். பச்சைப் பயல் எப்படி இருக்கா?”

வேலக்கிப் போறா; சம்பளத்தக் கொண்டு பொன் னாச்சியிட்ட தா கொடுக்கா. இங்ானதா எல்லாம் கெடக்கும். சின்னது ரெண்டு மூணு நா ராவெல்லாம் சொல்லத் தெரியாம. அளுத்திச்சி, ஆட்டுக்குப் போகவே பயமாயிருக்கும்பா பாஞ்ச்ாலி; நாங்கூட ராமசாமியக் கலியாணங் கட்டிட்டா இந்த வளவிலியே வந்திருக்கட்டு முங்கே. அ.வெ ஆத்தா ஒப்புவாளோ என்னமோ?.'