பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 221

ஆச்சி முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்.

தூத்துக்குடி ஊர் திருமந்திர நகராம், பனமரங்கள் கூடச் சலசலக்காதாம். ஆனால் உப்பளத்துத் தொழிலாளர் சலசலக்கப் போகிறார்கள். வானிலே மேகமூட்டம் தெரிகிறது. கரிப்பு மணிகளைப் பிரசவிக்கும் அன்னை சோர்ந்து துவண்டாற்போல் கிடக்கிறாள். காலையில் தொழி திறந்தால் பன்னிரண்டு மணிக்குக் குருணைச் சோறு இறங்கவில்லை. காற்றில் இருக்கும் வறட்சி ஓர் ஈரமணத்தைச் சுமந்து கொண்டு வந்து மெல்ல மேனியை வருடுகிறது. மாளய அமாவாசையன்று மணிகள் விழுமென்று பார்த் திருக்கிறார்கள்; விழவில்லை.

“அடுத்த சம்பளம் இருக்குமோ, இருக்காதோ?’ என்ற கேள்வியுடன் பென்டிரி சாமான் பத்து வரவுக் கடையில் கூடுகின்றனர். -

1.இந்த இருவது ருவாய கணக்கில வச்சிட்டு இருவது கிலோ அரிசி போடும்...’ என்று நார்ப்பெட்டியை .நீட்டு கிறாள் ஒருத்தி. - -

“ஏத்தா? எப்பிடி இருக்கி இன்னும் நிலுவை அறுவது ரூவாயும் சில்வானமும் இருக்கி. அம்பது ருவான்னாலும் தீத்துட்டா அம்பதுருவா சாமானம் எடுத்துட்டுப்போ!’ என்று கடைக்காரன் மாட்டுகிறான்.

எத்தினி நாளக்கி மொடங்குவாகளோ?”

அது எப்பிடித் தெரியும்? ரொம்ப உஜாராத்தா இருக்கா. கங்காணிமாரெல்லாமும் சேர்ந்திருக்காவ, பனஞ் சோலை அளம், தொர அளம் மொத்தமும் சேந் திருக்காவ...” -

‘ம், இதுபோல எத்தினி பாத்திருப்போம்? பிள்ள குட்டி தவிச்சிப் போயிரும்; வெளியாளக் கொண்டு வருவா, இல்லாட்டி பத்துபைசா ஏத்துவா?” என்பன போன்ற பேச்சுக்கள் எங்கு திரும்பினாலும் செவிகளில் விழுகின்றன,