பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 கரிப்பு மணிகள்

அவர்களை எதிர் கொண்டு அழைப்பவனாகப் பாதி வழிக்கே ஒடிச்சென்று நிற்கப் போகிறான்.

அருணாசலத்துக்கு அடிமனதில் ஒர் அச்சம் உண்டு. ஏனெனில் தங்கபாண்டி அந்தப் பக்கமே நடமாடுபவன். அவன் பொன்னாச்சி தனக்குரியவளென்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறான். அதனாலேயே அவர் கேட்ட வுடன் பணமும் கொடுத்திருக்கிறான். அவனுக்குத் தெரிந்: தால் ஏதேனும் இடையூறு செய்து விடுவானோ என்ற அச்சத்தில் அவர் இந்தத் திருமணத்தை இங்கேயே வைத்துக் கொள்ள வேண்டாம் என்றே நினைத்திருந்தார். ஆனால், எல்லோரும் திருச்செந்துார் சென்று மணமுடிப்பதென்றால், செலவு அதிகமாகும். அதற்கேற்ற தாராளம் கூட இப்போது இல்லை.

“நாங்க முன்னாடி மாப்பிள்ளையோடு வந்து காத் திருப்பம். நீங்கத பொண்ணுக்குச் சிங்காரிச்சிக் கூட்டியார நேரமாவும்’ என்று தனபாண்டியன் கூறினாரே? மணி எட்டாகிறது. இன்னும் வரவில்லை? எட்டு மணிக்கு அவர்கள் மணமுடித்துத் திரும்பிவிட வேண்டும் என்றல் லவோ திட்டம் போட்டிருக்கின்றனர்!

பொறுமையின் உச்சி விளிம்பில் நிற்பதைப் போன்று ஓர் . பரபரப்பு அவரை அலைக்க, மேற்கே அவர் விழிகளைப் பதித்திருக்கையில், பின்புறமிருந்து குரல் கேட்கிறது.

‘'என்ன மாமா? என்ன விசேசம் இன்னிக்கு? கோயில்ல வந்து?...அட...பொன்னாச்சியா?...என்ன இன்னிக்கு?’ என்று. மண்டபத்தின் பக்கம் தங்கபாண்டியின் குரல் கேட்டு அவர் திடுக்கி.டவராக வருகிறார். அவர் உமிழ் நீரை விழுங்கிக் கொள்கிறார். எங்க வந்த, நீ?”

“நா கிளித்தட்டு ஒடப்பக்கம் வரயில இங்க ஆளுவ. தெரிஞ்சிச்சி, என்ன விசேசம்னு வந்த, அங்ஙன ஆர எதிர்பார்த்திட்டு நிக்கிறிய?” *