பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

மருதாம்பா வாழ்க்கையின் மேடுபள்ளங்களுக்கிடையே :புள்ள முரண்பாடுகளைக் கண்டு தளர்ந்துவிட மாட்டாள். குடிகாரத் தந்த்ையும் அடிப்பட்டுப் பட்டினி கிடந்து நேர்வும் கொம்பரமும் அனுபவித்த தாயையும் விட்டு ஒரு கிழவனுக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டுப் பிழைக்க வந்த போதும், தனது இளமைக்கும் எழிலுக்கும் வேறு கிளைகளில் பயன்களுண்டு என்று அவள் வயிறு பிழைக்க வந்த களத்தில் உணர்த்தப்பட்டபோதும் அவள் விம்மி எழவுமில்லை; சுணங்கிச் சோர்ந்து விடவுமில்லை. அவர்களுக்கென்று வாழ்க்கையில் இலட்சியங்களோ, பற்றுக் கோடுகளோ எதுவு மில்லை. வாழ்க்கை என்பதே பசியோடும், வேற அடிப் படைத் தேவைகளோடும், உடலுழைப்போடும் ஏற்படும் இடைவிடாத போராட்டம், அதற்காகவேதான் மனித பந்தங்கள்; பொருளாதாரத் ைேவகளின் அடிப்படையிலேயே கிளைக்கும் நெருக்கடிகளும் வாய்ப்புகளும்தான் அவனைப் போன்றோருக்கு வாழ்க்கையின் போக்கையே அமைக்கின்றன என்று தெரிந்தவள் அவள்.

தெப்பத்தில் ஒதுக்கப்பெறும் கடல்நீரைப்போல் அவர்கள் தங்கள் உடலுழைப்பை யாருக்காகவோ குவிக் கின்றனர். கடல்நீர் தனது சாரத்தைப் பாத்திகளில் மணி களாக ஈந்துவிட்டு *நஞ்சோடையாக வெளியேறும்போது யாரோ அதைக் கவனிக்கிறார்கள்! எங்கேனும் தறிகெட்டு ஒடி மணலோடையில் போய்ச்சேரும். அல்லது எங்கே னும் காட்டிலே போய்த் தேங்கி முடியும். அவர்களுடைய உரமும் அடிப்படைத் தேவைகளைத் தீர்த்துக்கொள்ளும்

  • நஞ்சோடை-உப்பை வாரியபின் எஞ்சிய நீர் வெளிச் செல்லும் ஒடை.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/23&oldid=657456" இலிருந்து மீள்விக்கப்பட்டது