பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 கரிப்பு மணிகள்

மணி என்ன ஆயிருக்கும் என்று தெரியவில்லை. சொக்கு புருசன் எழுந்து உட்கார்ந்து இருமுகிறான். அவள் உள்ளே சென்று கதவைச் சாத்திக் கொள்கிறாள்.

உறக்கம் வந்தது தெரியவில்லை. தங்கபாண்டி மஞ்சள் மஞ்சளாகப் பழக்குலையும் கையில் பிடித்து வருவது போல் ஒரு கனவு. சின்னம்மா பழத்தைப் பிய்த்துச் சிரித்தக் கொண்டு அப்பச்சியிடம் கொடுக்கிறாள். நிசம் போலிருக் கிறது. சட்டென்று விழித்துக் கொள்கிறாள். எங்கோ கோழி கூவுகிறது, ஆளவரம் கேட்பது போலிருக்கிறது. அவள் கதவைத் திறக்கிறாள். இரண்டு வலிய கரங்கள் அவளை வளைக்கின்றன. வுடும்...வுடும்... ஆச்சி, புள்ளயஸ்ளாம் முழிச்சிடுவாக...’ என்று கிசுகிசுக்கிறாள் அவள்.

அவள் கதவை மெல்லத் தாழிடுகிறாள்.

திங்கட்கிழமை காலையில் சாரி சாரியாக உப்பளக்காரர் தெருக்களில் செல்லவில்லை. கையில் அலுமினியத் துளக்குப் பாத்திரமும், பொங்கிப் பீளை சார்ந்த கண்களும் தலைக் கொட்டைச் சுருட்டுமாகப் பெண்களும் சிறுவர் சிறுமியரும், அடிமிதித்துச் சாலையின் பொடி யெழுப்பவில்லை. கோல்டன், புரம், கிரசன்ட் நகர், ஆகிய எல்லாத் தொழிலாளர் குடியிருப் புக்களிலும் ஆண்களும் பெண்களும் வீடுகளில் கூடி நின்று வானில் மேகங்கள் கூடுவன்தப் பார்த்துப் பேசுகின்றனர். சிறுவர் சிறுமியர் வேலையில்லை என்று தெருக்களில் விளையாடுகின்றனர்.

அருணாசலம் முதல் பஸ்ஸுக்கே வந்து இறங்கு கிறார்.

“வாரும்” என்று செங்கமலத்தாச்சி வரவேற்கிறாள்.