பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 239

‘வழியெல்லாம் போலீசப் பாத்த, என்னமோ காதுல விழுந்திச்சி. ஆரோ தலைவரைப் போலிசி பிடிச்சில உள்ள கொண்டிட்டுப் போயிட்டான்னா. ராமசாமி வந்தானா?”

விடியக்காலம் வந்திற்றுப் போனா பாத்த...’. பொன்னாச்சி முற்றம் பெருக்குபவள். பேச்சுக் குரல் கேட்டு ஓடி வருகிறாள்.

என்ன சொல்றிய மாமா போலீசுல ஆரப் புடிச் சிட்டுப் போனாவ?”

‘பொன்னாச்சியா? எப்பிடிம்மா இருக்கே? ஒம்மாமியா எங்கேருக்கா?”

“இங்கதா. அவிய காலப் புடிச்சிட்டுப் போவாதேன்னு அழுதாவ. என்னயும் ஏசிட்டிருக்கி...மாமா. ஆரப் போலீசில புடிச்சிப் போனா?”

‘தெரியலம்மா, சொல்லிக் கிட்டா பஸ்ஸில. இது வழக்கம்தான? நா இங்க வருமுன்ன மூணா நெம்பர், நாலா நெம்பர் தெருவழியாத்தா வர்றே. எந்த அளத்துக்காரரும் வேலய்க்குப் போவல. இன்னிக்கு மானம் கறுத்திருக்கு. இப்ப மழை வந்தா, வாரின உப்பக் காவந்து பண்ண்ல, முடை போடலன்னா நட்டமாயிடும். மொதலாளி மாரு எறங்கி வருவா. ஒரே வழி தா. ஆனா, கூலிய வாணா பத்து பைசா ஏத்துவானே ஒழிய, ஒரு தொழிலாளிக்குச் சட்டப்படி கொடுக்க வேண்டிய சலுகை, வசதியெல்லாம் குடுப்பானா? இத்தனை நாளக்கி லீவுன்னு பட்டியல் போட்டு இனிஸி பெக் டரிட்டக் காட்டுவாஞ்வ. ஆனா சொதந்தர நாளுக்கும் மே நாளுக்கும் கூட சில அளங்களில் லீவு கிடையாது கூலியோட. இத்தினி நா ருசி கண்டவுக இப்ப திடீர்னு எல்லாம் விட்டுக் கொடுப்பாகளா? எத்தினி நா குஞ்சும் குழந்தையுமா பட்டினி கிடப்பாக?”

செங்கமலத்தாச்சி பேசவேயில்லை.

மாமன் முன்பு இவ்வாறு வேலை நிறுத்தம் செய்த கதை களைப் பற்றி பேசுகிறார்.