பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 241

என்ன ஏங் கும்பிடுறிய? இரியும். ப்ொன்னாச்சி. பானையவச்சி கொஞ்சம் கூடவே போட்டு வடிச்சி வையி. ஒரு குளம்பும் காச்சி வையி. ஆரும் பசி ‘பட்டினின்னு வருவா...’ என்று கட்டளை இடுகிறாள்.

பகல் தேய்ந்து மாலையாகிறது. மாமன் சாப்பிட்டு விட்டு வெளியே செல்கிறார். வளைவே கொல்லென்று கிடக்கிறது. ஆச்சி பெட்டி முடைகிறாள். சொக்கு மாவாட்டுகிறாள். பொன்னாச்சி தண்ணிரெடுத்து விட்டு வேலை முடித்துவிட்டாள். வெளிக்கு இய்ங்கிக் கொண்டிருந் தாலும் உள்ளத்தில் கருக்கரிவாளின் கூர்முனை ஊசலாடுவது போல் ஒர் அச்சம் நிலைகுலைக்கிறது. வேலை முடக்கம் ஒரு நாள் இரண்டு நாளுடன் முடியுமா? s -

“அக்கா!...அக்கா!’ என்று பச்சை ஒடி வருகிறாள்.

“எல்லோரும் ஊர்கோலம் போறாக!” வாங்க...எல்லாரும் - ஆங்க நின்னு பாக்கறாங்க...!”

நல்லகண்ணு, சொக்குவின் பையன், மருது, பாஞ்சாலி, சரசி எல்லோரும் தெருவில் ஒடுகின்றனர். அவளும் கூஆவலுடன் தொழிமுனைக்குச் செல்கிறாள். அவளுடைய நாயகன் செல்வதைப் பார்க்கத்தான்! == s

“உப்பளத் தொழிலாளர் சங்கம் வாழ்க! எங்களுக்கு நியாயம் வேண்டும் எங்களை ஆலைச் சட்டத்துக்கு உட் பட்ட பதிவுத் தொழிலாளியாக்குங்கள்! நீதி கொல்லாதீர்! ஆணுக்கும் பெண்ணுக்கும் சமவேலை சமக்கூலி...”

கோஷங்கள் காற்றிலே மிதந்து வந்து செவிகளில் அலை அலையாக விழுகின்றன.

பச்சை, பாஞ்சாலி நல்லகண்ணு எல்லோரும் புரியாமலே ஜே. கோஷம் போடுகின்றனர். ஆண்களும் பெண்களுமாகக் கூட்டம் முன்னேறி வருகிறது. காவல்துறையின்ர் முனையில் ஆங்காங்கு முதுகில் எதையோ சுமந்து கொண்டு நிற்பதை