பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 845

“பனஞ்சோல அளத்துல, லாரியோட ஆள் கொண்டு. வந்திருக்கானுவ...’

அவள் முடி. பிரிந்து விழுகிறது. லாரியோட, ஆள். கொண்டு வாராகளாமா?...’

ஒருகணம் அவள் சக்தியைத் திரட்டிக் கொள்வது போல் நிச்சலனமாக நிற்கிறாள். மறுகணம் இடுப்பிலிருக்கும் சாவியைக் கையில் எடுக்கிறாள். *

“ஏட்டி, பொன்னர்ச்சி? நீதா. சாவியப்புடிடீ. f எல்லாம் பதனமாப் பாத்துக்க!’ என்று முற்றத்தில் போட் டிருக்கும் கம்பு ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியே. பாய்கிறாள்.

கண்மூடிக் கண் திறக்கும் வேகத்தில் நடக்கிறது. சாவியைப் பொன்ன்ாச்சி பெற்றுக் கொண்டு நிமிர்வதற்குள் அவள் ஒடி விட்டாள்.

ராமசாமியின் அன்னை, என்ன நடக்கிறதென்று புரி யாமலே ஒர் தனி உலகத்திலிருந்து யாரையோ வசை பாடத் தொடங்குகிறாள். ஆனால் அவள் அந்தத் தெருவில் நீண்ட சழியுடன் ஒடும் காட்சி, வறண்ட பொட்டலில் தீக்கொழுந்து போல் ஒர் மாங்கன்று துளிர்ந்தாற் போன்று அந்நியமாகத் தெரிகிறது. அவள் ஒடும் போது அள்ளிச் செருகிய முடி அவிழ்ந்து பறக்கிறது. தெருவில் சாதாரணமாகச் செல்லும் சைகிள்காரர், குடும்பக்காரர், கடைக்காரர் எல்லோரும் சட்டென்று திரும்பி நிதானித்துப் பார்க்குமுன் அவள் தெருத் திரும்பி விடுகிறாள்.

குப்பைமேடும் முட்செடிகளுமான இடத்தின் ஒற்றை. படிப் பாதையில் அவள் புகுந்து விரைகிறாள். ஆங்காங்கு. மண்ணில் ஒரமாக விளையாடும் சிறுவர் சிறுமியர் அவளை நின்று பார்க்கின்றனர்.

“ஐயா! எல்லாம் வாரும் எல்லாம் வாருங்க! பனஞ்சோல அளத்துல ஆளுவளக் கொண்டிட்டு வாராவளாம்! வாங்க : அளத்துக்காரவுக வாங்க!"